பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சடகோபன் செந்தமிழ் மொழியில் பிரிவுத் துன்பம் மிகுந்திருப்பதன் காரணத்தை ஒர் அற்புதமான உவமை கொண்டு விளக்குகின்றார் நம் பிள்ளை. காசினை இழந்தவனுக்கும் பொன்னினை இழந்த வனுக்கும் இரத்தினத்தை இழந்தவனுக்கும்'" இழந்த தனால் உண்டாகும் துன்பம் ஒத்ததாக இராது வேறுபடு வது போன்று, அங்கும் இங்கும் பிரிவுத்துன்பம் ஒன்றாயினும் துன்பத்தில் வேற்றுமை உண்டு. விபவாவதார அதுபவ அபேட்சையை விட சிறந்தது அர்ச்சாவதார அயேட்சை: அதிற்காட்டிலும் மிகவும் சிறந்தது பாகவதர் கூட்டத்தில் கூடியது.பிவிக்க ஆசைப்படுவது. ஆகவே இங்கனம் மிகச் சிறந்ததான அபேட்சை கைகூடப் பெறாமையினா லுண்டான ஆற்றாமையும் இதற்குத் தக்கவாறு கனத் திருக்குமன்றோ? அப்படிப்பட்ட ஆற்றாமை பேசுவிக்கின்ற திருவாய்மொழி தாய்ப் பாசுரமாக நடைபெறுகின்றது . நித்தியசூரிகளின் திரளிலே சென்று சேர்ந்து அநுபவிக்கப் பெறாமையால் நோவுபடுகின்றாராயின் பின்னை, அவர்கள் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாமல் நரசிங்கா என்பது போன்ற இறைவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கூப்பிடு வது என்? என்னில்: எங்கேனும் ஒரு காட்டில் இரத்தினங்கள் பறியுண்டால், நாட்டிலே அரசன் வாசலிலே சென்று அவ்வரசன் பெயரினைச் சொல்லிக் கூப்பிடுவது போன்று, நித்திய சூரிகள் திரளிலே தாம் சென்று சேர்வதற்குக் காரண மாக இருப்பவன் இறைவனே யாகையால், அவ்விறைவ னுடைய திருப்பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகின்றார் என்று கொள்க. - - - ஆடியாடி யகம்க ரைந்துஇசை பாடிப்பாடிக் கண்ணின் மல் கிளங்கும் 2. காசு என்றது அவதாரங்களை; பொன் என்றது அர்ச்சாவதாரத்தை:இரத்தினம் என்றது.அடிங்ார் భీశ}ళ ,