பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 227 களாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பனைக்கைக்குக் காரணம் ஆயிற்று. ஆகவே, என்றைக்கோ கழிந்து போன எம்பெரு மான் படிகளை அக்காலத்திற் போலவே இன்று அநுபவிக்க வேண்டும் என்ற விடாய் பிறந்தது. ஆசைப் பட்டபடியே கிடையாமையாலே எம்பெருமானோடு கலந்து பிரிந் தாளொரு பிராட்டி நிலைமையை யடைந்து தான்மோகித்து கிடக்க, அவள் படியை அநுசந்தித்த திருத்தாயார் பெண் பிள்ளையின் நிலையைப் பேசுகின்ற முகத்தாலே சுய நிலையை வெளியிடுவதாய்ச் செல்லுகின்றது. இத்திருவாய் மொழி. பசலனாய் ஏழுலகு உண்டு பரிவின்றி ஆலிலை அன்ன வசம்செயும் அண்ணலார் தாளினை மேலணி தண்ணம் துழாய்என்றே மாலுமால் வல்வினை பேன்மடி வல்லியே (1) (பரிவு - வருத்தம்; அன்னவசம் செய்யும் . உறக்கம் கொள்ளும்: இணை - இரண்டு; தண் அம் - குளிர்ந்து அழகிய; மாலும் - வியாமோகிக் கின்றாள்.) என்பது முதற்பாசுரம். இதில், பண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேண்டும் என்று என் மகள் ஆசைப்படுகின்றாள்' என்று திருத்தாயார் பேசுகின்றாள். பாலனாய் ! என்ற சொல்லாற்றலால் நம்பிள்ள்ை அருளிச் செய்வது; "பருவம் நிரம்பின பின்பு உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையில் சாய்ந்தானாகில் போலே தோற்றி அதனை வாரிப் போகடாதபோது நெல் பதர்க்கும் படியாய் இருப்பது ஒன்று. ஆப் படியே கைவல்யமும்.