பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சடகோபன் செந்தமிழ் நிலைமையே இத் திருவாய்மொழியில் உண்டாகின்றது. இதற்கு முன்னைய திருவாய் மொழியில் (4.3) ஆழ்வார் தாமான தன்மையிலிருந்து கொண்டே எம்: பெருமானுடைய காதல் குணத்தை அநுசந்தித்தார்; ஏன் பெரிய திருவந்தாதியிலும், . பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலர் என்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரான்வுருவே என்று (73) என்று போலிப்பொருள்களைக் கண்டு பூரிப்பு அடைந்தவரல் லவா?ஆகவே,இத்திருவாய்மொழியில் பிச்சேறி நிற்கின்றார் . இத்திருவாய்மொழிக்கு அவதாரிகை அமைத்த நம் பிள்ளை கூறுவார்: சென்ற திருவாய்மொழியில் பிறந்த நிரவதிகப் பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும்படியாக இருந்தது. இந்த நிலைமையைக் கண்ட எம்பெருமான் அந்த ரசத்தை அரையாறுபடுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது குறைத்து நின்றான்; இதனால் ஆழ்வாருடைய ஆற்றாமை மீதுர்ந்தது. பன் முடிப்பைப் போக்கடித்தான் ஒருவன் அதோடு போலியான முடிப்புகள் எல்லாவற்றையும் அவிழ்த் தவிழ்த்துப் பார்க்குமாப்போலே அவனோடொத்த பொருள் களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் எல்லாம் அவனாகக்கருதி மயங்கிக் கிட்டிப் பார்த்துப் பிச்சேறுகிறபடியாக நடைபெறுகின்றது இத் திருவாய்மொழி, வைப்பாம் மருந்தாம்’ (1.7:2) என்று சொல்லும்படி இவர்க்குச் சேம நிதி அன்றோ அவன்? திருத்தாயார் பேசுகின்றாள்: . மண்ணை விருந்து துழாவி 'வாமனன் மண்ணிது’ என்னும்; விண்ணைத் தொழுதவன் மேவு வைகுக்தம் என்றுகை காட்டும்;