பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 23? கண்ணையுள் நீர்மல்க கின்று 'கடல்வண்ணன்' என்னும்; அன்னே!என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன் பெய்வளையிரே? (1) (மண் - பூமி: விண் - ஆகாயம்; உள்நீர் - அகவாயில், கண் நீர்; பெருமயல் - அதிகமான மயக்கம்) என்பது முதற் பாசுரம், இதில் பராங்குச நாயகியின் திருத் தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்கட்கு 'இப்படி இவளை எம்பெருமான் பிச்சு ஏற்றினான்; இதற்கு என் செய்வேன்? என்கின்றாள். உலகத்தில் எல்லோரும் மண்ணை மண்ணாகவே நினைப்பர்; ஆழ்வார் நாயகி வேறு விதமாக நினைக் கின்றாள். எம்பெருமானுடைய நறுமணம் மிக்க திருவடியின் சம்பந்தம் பெற்றதனால்தான் மண்ணுக்கு மண்ம் உண்டாயிற்று என்பது இவள் நினைப்பு. கையினுடைய செயலாலே திருநாட்டைக் காட்டியதுடன், திருநாட்டில் அவன் இருக்கின்றபடியைக் காணப் பெறமையாலே கண்ணிர் மல்க நின்று தன் ஆற்றாமையாலே திருவடிவத்தை நினைத்துக் கடல் வண்ணனே! என்கின்றாள். கடல் போன்ற திருமேனியைக் காட்டியன்றோ என்னை இங்ஙனம் வியாமோகிக்கச் செய்தது என்று தெரிவித்தவாறு. இங்ஙனம் என் மகளைப் பிச்சேறும்படி செய்த பெருமான் விஷயத்தில் நான் செய்யக்கூடியது யாது? அவரை இங்கு வந்து சேரும்படி செய்ய வல்லேனோ? ஒன்றும் மாட்டுகிறிலேன்' என்பது கருத்து. இத்திருவாய்மொழியில் இன்னொரு பாசுரத்தைக் காண்போம். - கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்: போம்இள காகத்தின் பின்போய் 'அவன்கிடக் கையி' தென்னும்: