பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சடகோபன் செந்தமிழ் ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற கோமளவல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே (5) (கோமளம் - இளமை, அழகு; கிடக்கை - படுக்கை: ஆம் அளவு - ஆகும் அளவு; மால் மயக்கம்) என்பது ஐந்தாம் பாசுரம். இவளுக்கு இத்துன்பம் எவ் வளவாய் முடியக் கூடியது? என்று அறிகிலேன்' என் கின்றாள். கண்ணபிரான் கன்றுகளை மேய்த்தான் என்பதறிந்த பராங்குச நாயகி தெருவில் திரிகின்ற பருவத்தால் இளையனவாய் பெருத்திருக்கின்ற கன்றுகளைப் பிடித்தும், அனைத்துக் கொண்டு நம் கண்ணபிரான் மேய்த்த கன்றுகள் இவை என்கின்றாள். இங்கே ஈட்டின் பூரீசூக்தி : "கன்றின் கழுத்தைத் து; ಳ್ಗಿಚ್ಛಕ್ತಿ அது துள்ளிப் போகா நிற்குமே.இன் ப்ரிகர்iர்க்வுே இருந்ததென்னும்" என்பதாம். காற்றினும் கடியனாய் ஒடி அகம்புக்கு மாற்றமும் தாரான் என்கின்றபடியே கைக்கு எட்டாமல் ஒடுகின்ற தன்மை கண்ணபிரானுக்கு இருப்பதைப் போலவே கன்றுக்கும் கண்டதனால், கோவிந்தனுடைய பரிகரமே இவை என்று திண்னமாகச் சொல்லுவள் என்றபடி, கோவிந்தன் - பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்த பெரு மேன்மைக்கு முடி சூடினவன். - பாம்பினைக் கண்டால் அஞ் சாம ல் அதன் பின்னே ஓடி எம்பெருமானுடைய திருப்பள்ளி மெத்தை இது என்கின்றாள். ஐந்து பைந்தலை யாடரவினை மேவிப் பாற்கடல் யோக நித்திரை s சிந்தை. செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே என் கின்றபடியே அவனுடைய சேஷசயன் வைபவத்தையே