பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 237 கூப்பிடுகின்றாள். ஒரு நகரிலுள்ள பேட்டை வேவப்புக்கால், "ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது என்பாரைப் போலே. இதில் பாசுரங்கள் தோறும் இழந்தது என்று வாராநின்றது. சங்கை இழந்தாள், மாமையிழந்தான், சாயை இழந்தாள், மாண்பிழந்தாள், கற்பு இழந்தாள், கட்டு இழந்தான் - என்றிப்படிப் பலவும் இழந்ததாகச் சொல்லப்படுகின்றது. எம்பெருமானுடைய ஒரே அவதார சேஷ்டிதங்களையும் ஒரே திவ்விய குணங்களையும் நினைக்க நினைக்க, தாம் பரவசராய் மேனி மெலிந்து ஆவிநீராய் உருகுகின்றன்மையை ஆழ்வார் அந்யாயதேசத்தாலே (வெளிப்படையாகவே) அருளிச் செய்கிறாராயிற்று. . மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு லேக் கருகில மேக நியாயற்கு கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர் ஏலக் குழலி இழந்தது சங்கே ( ) . |மால் - அடியார் பக்கம் வியாமோகம் உடையவர்; வையம் - பூமி, மேகநியாயன் - மேகம் போன்ற தன்மையன் ஏலம் - வாசனை, சங்கு - சங்கு வளையல்) X- . என்பது முதற் பாசுரம். இங்கு செந்தாமரைக் கண்ணற்கு” என்பதற்கு கண்களையுடையவன் என்று பொருளானாலும் கண்கள் என்ற அளவிலேயே பொருளை நிறுத்திக் கொள்க. எதற்காக இப்படியெனில்; ஒவ்வொரு சிறப்புக் கூறுகளையும் நின்ைத்து தன் மகள் தளர்கின்றாள் என்று சொல்லுவதே இங்குச் சுவையுடைத்து. - என்மகள் மாலுக்குச் சங்கிழந்தாள், வையமளந்த மணாளற்குச் சங்கிழந்தாள், கோலச் செந்தாமரைக் கண்ணற்குச் சங்கிழந்தாள்- என்று இங்ஙனம் தனித் தனியே சிந்தித்து அவன் அடியார் பக்கலில் கொண்ட வியா