பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சடகோபன் செந்தமிழ் மோகத்தை நினைந்தவாறே சங்கிழந்தாள், அவன் வைய மளந்த சில குணத்தை நினைந்தவாறே சங்கிழந்தாள், அவனது திருநிறத்தை நினைந்தவாறே சங்கிழந்தாள், அவனது செந்தாமரைக் கண்களை நினைந்தவாறே சங்கிழந்தாள்’ என்கின்றாள் என்க. சங்கிழப்பதாகக் கூறுதலின் கருத்து பிரிவினால் மேனி மெலிந்தாள் என்பதாம். மாலுக்கு : என் அடியார்கள் என் மீது எவ்வளவு வியாமோகம் கொண்டிருக்கின்றார்களோ நானும் அவ்வளவு வியாமோகம் அவர்களிடத்தில் கொண்டிருப்பேன்; என்னிற் காட்டில் மேற்பட்டவர்களிடத்தில் நான் எப்படி வர்த்திப் பேனோ (வர்த்தித்தல் - இருத்தல்) அப்படி அவர்கள் திறத்திலும் வர்த்திப்பேன் என்பது கருத்து. இப்படிப்பட்ட வியாமோக குணத்தை நினைத்து என் மகள் உருகுகின்றாள் என்றவாறு. வையமளந்த மணாளற்கு: "மூவடி மண்கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்’ (பெரி. திரு. 9, 4:2). அவன் இரந்து மண் பெற்றான். இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரை பெற்றிருக்குமே. மணாளன் - அநுபவிக்கின்றவன். கீலக்கருகிற மேகநியாயற்கு : மேகத்தின் வடிவு போன்ற வடிவை நினைத்து, அம்மேகத்தின் தன்மைபோன்ற தன்மையை நினைத்து உருகுகின்றாள் என்கை, பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் “வந்தருளி என் நெஞ்சிடங்கொண்ட வானவர் கொழுந்து (திருவாய் 5.7:7) என்று ஆங்காங்குச் சென்று அருள் புரிவான். மின்னலுள்ள காலம் நீர் நிரம்பி யிருக்கும் மேகம்; எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடி யிருக்கும் காலத்திலே கருணை விஞ்சியிருக்கும். இவள் சந்நிதியால் காகம் தலைபெற்றது; அதில்லாமையாலே