பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் * . . - - 243 ஆதலால் பெரும் பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணும் சோறு, பெருவிடாயனுக் கிடைத்த நீர்தான் பருகுநீர் என்று கொள்ள வேண்டும். பெரும்பசியனுக்குச் சோற்றிலும், விடாய்த்தவனுக்கு நீரிலும் எப்படிப் பட்ட ஆர்வமோ அப்படிப்பட்ட ஆர்வம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில் என்றதாயிற்று, எல்லாம் கண்ணன் : இப்படிக் கருதுகின்ற மகாத்மா கிடைப்பது மிகவும் அரிது என்கை. அவ்விழவு தீர வகுளா பரண மகாத்மா வந்து தோன்றினாராயிற்று. கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி: 'எனக்குச் சகலவிதமான தாரக போஷக போக்கியங்களும் கண்ணன் எம்பெருமானே’ என்று பலகால் சொல்லிக் கொண்டு நீர் மல்கு கண்ணராயிருப்பதே ஆழ்வாருடைய இயல்பு. இப் ப டி ப் பட் ட பராங்குச நாயகி 'அப் பெருமானுடைய திருக்குணங்களும் தி வ் வி ய மா ன ஐசுவரியமும் மிகமிக விளங்குமிடமான திருக்கோளூர் எங்குளது? எவ்வளவு தொலைவில் உளது? என்று கேட்டுக் கொண்டே திருக் கோளுர்க்கே சென்று புகுந்திருப்பாள் வேறு எங்கும் செல்லக் காரணம் இல்லை; இது திண்ணம்' என் கின்றாள் திருத்தாயார். - - - புகுமூர் : இவ்விடத்தில் ஈடு: காட்டுத் தீயிலே அகப் பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறுபோலே சம்சாரமாகிய பாலை நிலத்தில் காட்டுத் தீயில் அகப் பட்டவனுக்கு உகந்தருளின திலங்களானவை பொய்கையும் பொழிலும் போலேயிறே. புகுமூர்' என்கையாலே புக்கார் போகுமூர் அன்றென்கை' எம்பெருமானார் திவ்வியதேச யாத்திரையாக எழுந்தருளுகையில் திருக்கோளுருக்கு எழுந்தருளாநின்றார்; அப்போது அங்கு நின்றும் வெளியேறுகின்றாளொரு அம்மை