பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சடகோபன் கெந்தமிழ் நித்திய காசியமாதலால் அதனைச் சொல்லுகிறது. கைகளால் இறைக்கும் என்றது கண்ணிரின் மிகுதியைச் சொன்னபடி சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும் : சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் நம் பெருமான் சேவை சாதிக்கின்ற அழகு காண்மின் காண்மின் காண வாரீர்!" என்றுசொல்லி அதிக நினைவினால் (பாவநாப்ரகர்ஷத்தாலே) சங்கு சக்கரங்களை நோக்கிக் கை சுப்புகின்றாள். இன்னார் என்று அறியேன், அன்னே! ஆழியொடும், பொன்ஆர் சாரங்கம் உடைய அடிகளைக இன்னார் என்று அறியேன்” (பெரி. திரு. 10.10:9) என்று பரகால நாயகி அசாதாரண லட்சணங்களைக் கானா நிற்கக் செய்தேயும் இன்னாரென்று அறுதியிடமாட்டாதே பேசுகின்றாள்: இப்பராங்குச நாயகி திருவாழி திருச்சங்கு களைக் காணாதபோதும் கண்டதாக நினைந்து வாயால் மொழிந்து அஞ்சலி பந்தம் (கைகூப்புதல்) பண்ணாநின்றாள்" தாமரைக்கண் என்றே தளரும் : தாமரைக் கண்களால் நோக்காய் (9.2:1) என்று சொல்ல வேண்டுமென்று நினைத்துத் தொடங்கினாள்; தாமரைக் கண் என்ற அளவில் விகாரப்பட்டு மேலே சொல் எழமாட்டாமல் தளர்கின்றாள். 'பெருங்கேழலார்தம் பெருங்கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிழற வைத்தார் இவ்வகாலம்'(திருவிருத். 45) என்று அத்தலையில் திருக்கண்ணோக்கம் அடியாகவே தாம் ஒரு பொருளாகப் பெற்றதாய் அருளிச் செய்தாராகையாலே அந்தத் திருக்கண்களை நினைத்து, ‘என்னை இவ்வளவனாக ஆக்கின திருக்கண்களுக்கு இப்போது உபேட்சிக்கை (அலட்சியம் செய்தல்) பணியாயிற்றே என்கிறாளாகவுமாம்: உன்னைவிட்டு எங்னேதரிக்கேன் என்னும்: உண்டியே. உடையே உகந்தோடும் இம்மண்டலத்தவரிலே (பெரு,