பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சடகோபன் செந்தமிழ் போதியதாம். இங்ஙனமிருக்க, இறைவனிடத்து இம்மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்றிருக்குமாயின் அவனை அநுபவியாதிருக்க முடியுமா? ஆதலால் "அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும் என்னும் அவா மிக்கு எழுகின்றது. அப்பொழுதே நினைத்தவாறு அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்து ன்பத்தை, எம்பெரு மானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடு கிறாளாகிய ஆற்றாமை கைகொடுக்க விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு அங்கே வாழ்கின்ற பொருள் களைக் கண்டு அவை யாவும் பகவானைப் பெறாத காரணத் தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகின்ற பாசுரத்தால் பேசுகின்றார். இத் திருவாய்மொழில் நாரை (!), அன்றில் (2), கடல் (3), காற்று (வாடை4), வானம்-மேகம் (5) சந் திரன் (6), இருள் (7), கழி (8), விளக்கு (9) ஆகிய பொருள்களை நோக்கி அவற்றுக்குண்டான சில தன்மைகளை இயற்கை யாகக் கருதாது எம்பெருமானின் பிரிவினால் ஏற்பட்டவை யாகக் கொண்டு அவற்றுக்குமாகத் தானும் சேர்ந்து கொண்டு வருந்துகின்றார். வாயுக் திரைபுகழும் கானல் மடகாராய் ஆயும் அமருலகும் துஞ்சிலும் துேஞ்சா நோயும் பயலையையும் மீதுர வெம்மேபோல் நீயும் திருமாலால் நெஞ்சங்கோட் பட்டாயே (1) (திரை - அலை; உகழும் . தாவும்; கானல் - கடற்கரைச் சோலை; ஆய் - தாய்; பயலை பசலை; கோள் - படுதல் - பறித்துக் கொள்ளப் பெறுதல்) என்பது பாசுரம். பிரிந்தவர்கள் இரங்குவது நெய்தல் நிலமாதலால் ஆழ்வார் இப்போது கடற்கரைச் சோலையில் g ւ: பதா கக் கொள்ள வேண்டும். இந்தச் சோலையில் உணவுக்காக ஊக்கம் கொண்டிருக்கும் நாரையொன்று