பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 சடகோபன் செந்தமிழ் நாரையும் என்றபடி-இனி மீனைக் குறிக்கோளாகக் கொண்டு சவியாமல் நிற்கின்ற நாரையே! என்று கொள்ளாது சர்வேசுவரனே காப்பவன் என்றிருப்பார் மூவகைத் துன்பங்களாலும் வந்தி இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று மலைகள் போன்ற அலைகள் மேலே தன்விச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே! என்று கோடலுமாம். . இராமணிகள் (கிராமத்தில் தலைமை பெற்றவர்கள்) பிறர்க்குத் துன்பம் செய்து கொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடி த்திட்டுத் 'தார்மிகர்’ என்னும்படி திரிவது போன்று நாரையும் நினைத்த பெரியமீன் கைபுகு மளவும் சிறிய மீன்கள் வந்தாலும் அவற்றில் விருப்ப மற்றிருத்தலின் மடநாராய் என்கின்றாள். மடப்பமாவதுபற்றிற்று விடாமை. என்னைப் பெற்ற தாயும், உறங்காமையே வடிவமான உம்பர் உலகமும் உறங்கினாலும் நீ உறங்குவதில்லையே! இதற்குக் காரணம் அறிகிலேன்; இப்படி நீ இருப்பதைக் கானுமிடத்து இதற்கொரு சிறந்த காரணம் இருத்தல் வேண்டும்; உள்ளே உருகி நைந்து அது காரியமாகப் பசல்ை நிறமும் மேலே தெளிவாகத் தெரியும்படியிருந்து நான் நோவுபடுவது பகவத் விஷயத்தில் ஈடுபட்டதனாலே: இப்படிப்பட்ட நோயை நீயும் உற்றிருப்பதாகக் காண்கின்ற படியால் என்னைப் போலவே நீயும் திருமாலால் நெஞ்சு கொள்ளை கொள்ளப் பெற்றாய் போலும். * . » ஆழ்வார் பெண்ணிலைமை எய்திப் பேசுகிற பதிகம் இது என்பது இரண்டாம் அடியின் முதற்பதமாகிய ஆவும்: 7. மூவகைத் துன்பங்கள் : தெய்வம்பற்றி வருவனவும் தன்னைப்பற்றி வருவனவும் பிற உயிர்களைப் பற்றி வருவனவும் ஆம்.