பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சடகோபன்.செந்தமிழ் அடுத்து வரும் பாசுரங்களில் அன்றில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும் (2), கடல் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுதலும் (3), காற்று (வாடை)வேறுபாடின்றி எப்பொழுதும் திரிதலும் (4) மேகம் நீராய் இற்று இற்று விழுதலும் (5) , சந்திரன் தேய்வது வளர்வது என்றிருத்தலும் (6), இருள் பொருள் கனைக் காணவொண்ணாமல் தடுத்தலும் (7), கழி அலை வாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாயிருத்தலும் (8) விளக்கு இற்றிற்று எரிதலும் (9) -இங்கனம் இவற்றிற்கு இத்தன்மை எப்பொழுதும் உள்ளவை என்றறியாமல், இவையெல்லாம் தம்மைப் போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடு கின்றனவாகக் கொண்டு அவற்றுக்கு:0ாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்குப் போக்கு விட்டுத்தரிக்கு மாறு போன்று ஆழ்வார்நாயகியும் கண்ணுக்கு இலக்காகும் பொருள்கள் எல்லாவற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து நீ பட்டதோ? நான் பட்டதோ?’ என்று கூப்பிடு கின்றாள் என்பதைக் காணலாம். : (2) ஏறாளும் இறையோனும் (4.8) ; இத்திருவாய் மொழியின் அவதாரிகையில் நம்பிள்ளை அருளிச் செய்வது : "கேட்டாரெல்லாரும் நீராம்படியாக ஆழ்வார் எம்பெரு மானை அழைத்தும் அவன் வந்து முகம் காட்டவில்லை. அதனால் எம்பெருமான் தம்மை வேண்டா என்று வெறுத்து விட்டதாக அறுதியிடுகின்றார். அவனுடைய வெறுப்புக்கு இலக்கான இந்த ஆன்மாவும் அந்த ஆன்மாவுடன் சம்பந்தம் பட்ட பொருள்களும் (ஆத்மீயங்களும்) வேண்டாவென்று இவரும் வெறுகின்றார்.”