பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சடகோபன் செந்தமிழ் மேகலையனல் குறையிலகே (8) (மேகலை-அரைவடம்) உடம்பினால் குறையிலமே (91 உயிரினால் குறையிலமே (10) (உயிர்-ஆன்மா) இங்ஙனம் பகவத் கைங்கரியத்திற்கு உறுப்பல்லாதவை தியாஜ்யம் என்ற சாஸ்திரார்த்தம் வெளியிடப்பட்டதாகும் இத்திருவாய்மொழி. - : (3) மாசறு சோதி (5.3) ; இத்திருவாய்மொழியின் அவதாரிகையில் நம் பிள்ளை அருளிச் செய்வது: "மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை" (5.2 : 1) என்று எம்பெருமானின் வடிவழகையும் குணங் களையும் அநுசந்திக்கவே, முன்னர் 'ஏறாழும் இறையோனும்’ (4.8) என்கிற திருவாய்மொழியில் உண்டா யிருந்தர்காதலே மீண்டும் கிளர்ந்தெழுந்து எம்பெருமானுடன் மெய்யுறு புணர்ச்சியை விரும்பி அவனை அணைக்கக் கை நீட்ட, அவன் அகப்படாமல் சைகழிந்து, நிற்க, அதனாலே கலங்கி ஒரு பிராட்டியின், நிலையை அடைந்து :மடலூர்வேன்' என்று அச்சமுறுத்திக் காரியம் கொள்ளப் பார்க்கின்றார். - - சக்கரவர்த்திருமகன் வருணனைச் சரண் புகுந்து வழி வேண்டின இடத்தும் அக்கடலரையன் இறுமாப்பையே பாராட்டி முகம் காட்டாமல் அலட்சியம் செய்து கிடக்க, பெருமான் சீறிச் சிவந்த கண்ணினராய், "இதோ இக்கடலை வற்ற அழித்துவிடுகின்றேன்; இலட்சுமணா, சார்ங்கவில்லைக் கொண்டு வா; வாணர முதவிகள் காலாலே நடந்து செல்லட்டும்; ஒருக்கணத்தில் இக்கடல் படுகிற பாட்டைப் արr என்றருளிச் செய்து கடலரையனையே அழிக்க முயன் றாப்போலே நமது விருப்பத்தை நிறைவேற்றாத எம்