பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 சடகோபன் செந்தமிழ் 5. எங்ங்னேயே அன்னைமீர்காள் (5.5) நம்பிள்ளை உரையவதாரிகையில் கூறுவது; கீழ்த் திருவாய்மொழியில் (5.4) ஆழ்வார் இருளுக்கும் பனிக்கும் வருந்தின்படி சொல்லிற்று. இதுதான் இருள்தருமா ஞாலமாகையாலே தமோ குணம் மேலிட்டு நலிந்தபடியைச் சொன்னதாக உள்ளுறைப் பொருள் கொள்ளலாம். இருட்போது கழிந்து பகற்போது காண்கிறாப்போலே தமோ குணத்தின் மேவீடு கழிந்து சத்துவ குணத்தின் தலையெடுப்பு காணத் தொடங் கிற்று. அதனால் நெஞ்சு தரிப்புற்றுத் திருக்குறுங்குடி எம்பெருமானுடைய வடிவழகையும் திவ்வியாயுத திவ்வியா பரணசேர்த்தியழகையும் வாய்வெருவும்படியாயிற்று. உருவெளிப்பாடு என்பதொன்றுண்டு: இதனை வடமொழியில் ‘மானச சாட்சாத்காரம்' என்று சொல்வர். கண்ணுக்கு நேர்காட்சியாகத் தோற்றாமல் நெஞ்சுக்கு நேர் காட்சியாகத் தோற்றுதலே இது. மனத்தில் இடைவிடாது நினைக்கப்பட்ட பொருள் அந்தப் பாவனையின் மிகுதியால் கண்ணுக்கு எதிரில் காணப்பட்டாற்போலத் தோன்றுதல் இயல்பு. சூர்ப்பணகையால் வருணிக்கப்பட்ட சீதையின் வடிவத்தை இடைவிடாது சிந்தித்து நின்ற இராவணன் அவ்வடிவத்தைக் கட்புலனாகக் காண்பதும், இங்ங்னமே சூர்ப்பனகை இராமனை இடைவிடாது சிந்தித்தலால் அவன் வடிவத்தைக் கட்புலனாகக் காண்பதும் இவ்உரு வெளித்தோற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். இங்குப் பிராட்டி நிலையில் உள்ள ஆழ்வாருக்கு திருக்குறுங்குடி எம்பெருமான் காட்சியளிக்கின்றான். தாய்மார் தலை மகட்கு அடைவு சொல்லி மீடகப் பார்க்க, தலைமகள் 'எனக்கோ நீங்கள் அடைவு சொல்வது? திருக்குறுங்குடி நம்பி யின் வடிவழகில் நெஞ்சு பறியுண்டு கிடக்கும் என்னை

  1. 0, கம்ப-ஆரணிய-மாரீசன்வதை. 142-#53