பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 汾 நூல் முகம் மறைப்பாற் கடலைத் திருநாவின் மந்தரத் தாற்கடைந்து துறைப்பாற் படுத்தித் தமிழா யிரத்தின் சுவையமிர்தம் கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் சட்டம் களித்தருந்த நிறைப்பான் கழலன்றிச் சன்ம விடாய்க்கு நிழவில்லையே? - பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் பன்னிரண்டு ஆழ்வார்களைப்பற்றியும் அவர்களின் அருளிச் செயல்கள் பற்றியும் எளிய நடையில் நூல்கள் எழுதிப் பொதுமக்கட்குப் பக்தி விருந்தளிக்க வேண்டும் என்ற என்பேரவா நிறைவேறும் பாங்கில் சடகோயன் செந்தமிழ்’ என்ற தலைப்பில் நம்மாழ்வார்பற்றியும் அவர் தம் அருளிச் செயல்களை விளக்கும் பாங்கிலும் இது ஐந்தாவது நூலாக வெளிவருகின்றது. இந்த நூல் பதினைந்து இயல்களாக அமைந்துள்ளது, முதல் இயல் ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்க மாக உரைக்கின்றது. இரண்டு முதல் ஐந்து இயல் முடிய உள்ள இயல்கள் ஆழ்வார் முறையே சோழநாடு, பாண்டி நாடு, மலைநாடு, வடநாடு ஆகியவற்றிலுள்ள சில திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்ததைக் குறிப்பிட்டுப் பாசுரவிளக்கமும் தருகின்றன. ஆறாம் இயல் ஆழ்வார் களின் அருளிச் செயல்களைப்பற்றிச் சுருக்கமாக விளக்கம் 2. திருவரங்கக் கலம்பகம்-நம்மாழ்வார் துதி