பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சடகோபன் செந்தமிழ் மின்னிடை மடவார்கள் : இப்பாசுரத்தில் என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு தம் பீ என்று இருப்பதால் பந்தும் கழலுமான சில விளையாட்டுப் பொருள்கள் {லிலோபகரணங்கள்) எம் பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி விரும்புவதாகவும் தெரி கின்றது. பந்தும் கழலும் எம்பெருமான் கையில் இருக்கக் காரணம் என்? என்னில் : இதற்கு முன்னே இவளும் தானு மாகக் காதல் விளையாட்டுகள் (லீலைகள்) செய்து கொண்டி ருந்தார்கள். அப்படியிருக்கையில் எம்பெருமான் திடீரென்று பிரிந்து போனான். போனவன் சிறிது காலம் கழித்து மீண்டு வந்து நின்றான். அப்போது நாயகிக்கு ஊடல் (பிரணய ரோஷம்) தலையெடுத்திருந்ததனால் பேசாதே கிடந்தாள். எப்படியாவது இவளைப் பேசக் செய்ய வேண்டுமென்று கருதிய அவன் பல விதமான சேஷ்டிதங்கள் செய்து பார்த்தும் ஒன்றும் பலிக்கவில்லை. ஆதலால் விளையாடு வதற்காகக் கீழே வைத்திருந்த பந்து கழல்களை எகுத்துக் கொண்டு அவற்றிலே அளவு கடந்த ஆசை (அபிநிவேசம்) காட்டினான். 'பந்தே! நாயகிதான் பேசாவிட்டாலும் நீ யாவது என்னிடம் பேசுவாயன்றோ? கழலே! நாயகியின் கழல் எனக்குக் கிடைக்காவிட்டாலும், நீயாவது கிடைத்தா யன்றோ? என்று இப்படிப் பலவும் சொல்லித் தன்னுடைய அளவு கடந்தை காதலை (வியாமோகாதி சயத்தை) வெளிக்காட்டத் தொடங்கினான்: அப்போது நாயகி பேசாதிருக்க முடியாமல் பேசத் தொடங்கி இங்கனே கூறுகின்றாள் என்கை. - பராங்குச நாயகியை நோக்கி மின்னல் போலே இதொருநுண்ணிய இடையழகு இருந்தபடி என்!” என்று வருணித்துப் பேசினான் பெருமான். இதுகாறும் நம்மை மதியாதே இதரப் பெண்களுடன் கலந்து போந்த இவர் இப் போது இங்கே வந்து நம்மை வருணிப்பது நன்றாயிருக்