பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சடகோபன் செந்தமிழ் தொடர்பு வைத்துக் கொள்வதாக இருந்தாலன்றோ இந்த விசாரம் என்னும் கருத்துத் தோன்ற "இனி அது கொண்டு செய்வதென்? என்கின்றாள். ஆகில் நான் போகிறேன்' என்று. பந்துகழல்களோடு போகப் புறப்பட்டான்: போனால்போகிறான் என்று இருக்க இளே இவள் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே ( ) என்கின்றவளாகை யாலே விடமாட்டாதே மீண்டும் வார்த்தைக்கு இடம் வைக் கிறாள். என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ என்று. இவை உன்னுடையவை எப்படி? என்னுடையவையே என்று அவன் பிணக்குச் செய்ய இடம் தந்தபடி.. 8. வெள்ளைச் சுரிசங்கொடு (73) கீழ்த் திருவாய் மொழியில் (1.2) பெரிய பெருமாளுடைய திருக்குணங்களை யும் வடிவழகு முதலானவற்றையும் பராங்குச நாயகியான தான் வாய்வெருவியும் திருத்தாயார் சொல்லக் கேட்டும் சிறிது தரிக்கும் நிலை ஏற்பட்டது. மோகமும் தெளிந்தது. பின்பு பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய், அவனைக் கிட்டியல்லது நில்லேன்' என்னும் ஆற்றாமை பிறந்து இவன் விடாய்க்கு ஈடாகும்படி தென்திருப்பேரெயிலில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு கடைக்கண் நோக்கு முதலியவற்றால் கவரப்பட்டவளாய் அவன் இருந்த இடத்து ஏறப் போகவேனும் என்று புறப்பட, பழைய படியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப் பேர்ந்து உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு (பிராவண்யம்) ஆகாது. நமக்கு இது பழியாய் விளையும்’ என்று சொல்ல. நீங்கள் தடை சொல்லுகிறவற்றால் ஒரு பயனும் உண்டாகமாட்டாது; நான் மகரநெடுங்குழைக் காதனாலே நெஞ்சு பறியுண்டேன். ஆதலால் நானே போன தாக ஏற்படாமல் நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே