பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் பாசுரங்கள் 277 கொண்டு போய்ச் சேர்க்கப் பாருங்கள்’ என்று பராங்குச நாயகி தனக்குப் பிறந்த துணிவை அவளுக்கு அறிவித்துச் சொல்லுகிறதாகச் செல்லுகின்றது இத்திருவாய்மொழி. இதன் முதல் பாசுரத்தில் பர்ர்ங்குச நாயகி தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரிய திருவடித் திருநாள் நடந்து செல்லுகிற படியைப் பேசி, தென்திருப்பேரையிலே போக வேண்டுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றாள். சேர்வன்சென்று என்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள் என்னைத் தேற்ற வேண்டிக: கீர்கள்உ ரைக்கின்றது என்னி தற்கு? கெஞ்சும் கிறைவும் எனக்குஇங்கு இல்லை. கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட! கண்ண பிரான்வந்து வீற்றிருக்த ஏர்வள ஒண்கழ னிப்பழ னத் தென்திருப் பேரையின் மாகக ரே (9) (நிறைவு - அடக்கம்; கார்வண்ணன் - நீலவண்ணன்; ஞாலம் - உலகம்) : என்பது ஒன்பதாம் பாசுரம். இதற்கு முன்னுள்ள பாசுரத்தில் தென்திருப் பேரெயில் சென்றுசேர்வன் என்று கூறின தலை மகளை நோக்கித் தோழிமாரும் தாய்மாரும் இங்கனே பதற வேண்டுமோ? அப்பெருமானே இங்கு உடன் எழுந் தருள்வன் காண்: நீ புறப்பட்டுச் செல்லுகை யுக்தமன்று' என்று கூற, அதற்கு, நீங்கள் என்னையொன்றும் தேற்ற வேண்டா; போகைக்கு நீங்கள் சொல்லுகிற விரோதமென்? போனால் என்ன விரோதம் விளையும்?' என்று இவள் சொல்ல, அவனுடைய அழகு, எளிமை முதலான திருக் குணங்களாலே என்னுடைய துணிவு சாதுரிபம் முதலான வைகள் அபகரிக்கப்பட்டுப் போயினவாதலால் உங்கள் சொல்