பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 279 நெஞ்சு இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்கைக்குரிய நெஞ்சு இல்லை காண்மின்' என்கின்றாள் என்றுங் கொள்ளலாம். நெஞ்சும் நிறையும் போனவிடம் சொல்லப்படுகின்றது பின்னிரண்டடிகளில், கார்வண்ணன் என்பதற்கு நம்பிள்ள்ை ஈடு : “ தாய்மார் தோழிமார் ஆனவர்கள் வார்த்தை கேளாதபடியாம் வடிவு படைத்தவன்” என்று. அப் பெருமானின் திருமேனி நிறத்தில் நான் ஈடுபட்டவளாத லால் உங்கள் பேச்சைக் கேட்கமாட்டேன்' என்றவாறு. வெறும் வடிவழகு மாத்திரமேயல்ல; ஆபத்து ஏற்பட்டால் இரட்சித்துவிடுபவன் என்கின்றது கார்க்கடல் ஞாலம் உண்ட என்பதனால்,

  • இப்படிப்பட்ட எம்பெருமான் தன் பெருமையெல்லாம் தோற்ற வந்து எழுந்தருளியிருக்கும் இடமான நீர்வளம், நிலவளம் மிக்க திருப்பேரெயிலாகின்ற மாநகரிலே சென்று சேர்வேன்; உங்கள் தடைக்கு மீள மாட்டேன்; அவ்வழியிலும் நிற்கமாட்டேன்' என்கின்றாள்.

9. ஏழையர் ஆவி (7:7) : முன் திருவாய்மொழியில் (7.5) ஆழ்வார் கூப்பிட்ட கூப்பீடு பரமபதத்தளவும் சென்று பரவாசுதேவனுடைய திருச் செவியில் விழுந்திருக்கும். அது கேட்ட அப்பெருமான் ஆழ்வாரை ஒருவாறு தேற்றுவிக்க உருவெளிப்பாடு தோன்றச் செய்தருளினன். அதாவது அவனது திவ்விய அவயவங்களை மாநச சாட்சாத்கார மாகக் (மனத்தில் நேர்காட்சியாகக்) காணப்பெற்றார். கண்ணுக்கு நேராகத் தோன்றாமல், நெஞ்சுக்கு மாத்திரம் பொருளாதல் உருவெளிப்பாடு என்பது. அஃது இத் திருவாய்மொழியில் நடைபெறுகின்றது. ஐந்தாம் பத்தில் எங்ங்னேயோ அன்னை மீர்கள் (5.5) என்கின்ற திருக்குறுங்குடியற்றிய திருவாய்மொழியும்