பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சடகோபன் செந்தமிழ் மூலபலத்தினன்று பார்த்த பார்த் தவிடம் எல்லாம்" பெருமாளே யானாற்போல, எந்தப் பக்கமாகத் திரும்பி நின்றாலும் இவையேயாய் வேறொரு பொருள் தோன்றாத படியாயிற்றே; தோழிமார்களே! அன்னைமார்களே! உங்களுடைய இம்சைக்கு நான் ஆற்று வேனா? இத்திருக் கண்களின் இம்சைக்கு ஆற்றுவேனா? என்ன செய்வேன்? சொல்லுங்கள்' என்கின்றாள். அடுத்துவரும் பாசுரங்களில் முறையே மூக்கழகு நலிதல் (2), திருப்பவளத்தின் அழகு நலிதல் (3), திருப்புருவத்தின் அழகு நவிதல் (4), புன்முறுவலின் அழகு நலிதல் (5). திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிதல் (6; திருநெற்றியின் அழகு நலிதல் (7), இந்த ஏழு அங்கங்களும் அடங்கிய திருமுகமண்டலம் நவிதல் (8), திருக்குழல் கற்றை யி ன் அழகு நலிதல் (9) திருவ பிடேகத்தின் (கிரீடத்தின்) அழகு நவிதல் (10) அற்புதமாக பேசப் பெறு கின்றன. இதனை உரைநோக்கி அறிந்து அநுபவிக்க வேண்டும். . 10. கங்கள் வரிவளை (8. 2); எம்பெருமான் ஆழ்வாருக்கு முகக்காட்டாமைக்குக் காரணம் தம் பக்கல் இன்னும் சம்சார ருசி இருக்குமோ என ஐயுறுகின்றார். இல் ைல யானா ல் எம்பெருமான் தம்மைய் புறக்கணிப்பதற்குக் காரணம் இல்லையே என்று கருது கின்றார். உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியும் (திருமாலை . 34) சர்வேசுவரனுடைய திருவுள்ள மறிய தமக்குச் சம்சார ருசி இருக்கின்றது போலும். இல்லை யாகில் அவன் தம்மைப் புறக்கணிப்பத்ற்குக் காரணம் இல்லை 12. கம்ப._ யுத்த மூலபலம் வதை, (காந்தர்வாத் திரத்தின் செயலால் நிகழ்ந்தது)._ செய், 182. திருவிருத், 39 ஐயும் காண்க. மிகப் பொருத்தமாக உள்ளது இப்பாசுரம்,