பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 283 யன்றோ? புறக்கணிக்கக் காண்கின்றோமாதலால் தமக்குச் சம்சார ருசி இன்னும் அறவில்லை என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கக்கூடும். எல்லாம் அறிந்த அவன் அங்ஙனம் திருவுள்ளம்பற்றினால் அது பொய்யாக இருக்க முடியாதே. தம்மையும் அறியாமல் சம்சார ருசி உள்ளத்திலே உறைகின்றதோ என்ற ஐயம் உண்டாயிற்று. இதனால் ஆத்மாத்மியங்களில் தாம் நசையற்ற படியை எம் திருவுள்ளத்தில் படுத்தநினைக்கின்றார். பிராப்பியதிற்குத் தடையாகவுள்ள கிளி முதலானவற்றிலும் பிராபகத்திற்குத் தடையாகவுள்வர்களான தாயார் முதலானோரிடத்திலும் தமக்கு ருசி இல்லாமையை அந்யாபதேசத்தாலே" அருளிச் செய்கின்றார் இத்திருவாய்மொழியில். காலம் #ᎯᏋᏠ சென்றும் காண்பது ஆணை; உங்களோடு எங்கள் இடை இல்லையே: (7) என்றும், பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு (11) என்றும் உள்ள பாசுரங்கள் இத்திருவாய் மொழிக்கு உயிரானவை. இத்திருவாய்மொழியில் அந்யாபதேசப் பிரகாரம் இருக்கிறபடி என்? என்னில்: சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி. மறுபடியும் அவன் தானே வரக் கண்டிருக்கை தவிர்ந்து தானே புறப்படுவாளாய் அவனிருந்த தேசத்து ஏறப்போவதாக முயல, இது கண்ட தோழிமார் முதலானோர் படிகடந்து செல்வது உனக்கு ஆகாது காண்” என்று இதம் சொல்லி மீட்கப் பார்க்க, அவர் களைக் குறித்து, தோழிமார் தொடக்கமானவர்களிலும் மற்றும் உள்ளவர்களிலும் நசை இல்லாமையை அவர் களுக்கு அறிவிக்கின்ற பாசுரத்தாலே தமக்கு நசை இல்லாமையைச் சொல்லி அவர்களது பேச்சுக்கு இணங்க ஆமையைக் தெரிவிப்பதாக அமைகின்றது இத்திருவாய் மொழி. 13. அந்யாபதேசம் - வேறு ஒரு வகையாலே