பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 சடகோபன் செந்தமிழ் தலைமகள் மேனி மெலிந்து வாடிக்கிடக்கின்ற நிலையைக் கண்ட தோழியர் “நீ இப்படி மாறுபட்டமைக்குக் காரணம் என்ன? சொல்லாய்' என்ன, இவள் நாணத்தால் ஒன்றும் சொல்லாதிருக்க, 'நங்காய், உகவாத பிறர்க்கன்றோ நாணப்பட வேண்டுவது? எங்களுக்குக் கூடவா நானப் படுவது? உனது உள்ளத்திலுள்ளதை உள்ளபடி சொல்ல லாகாதோ?' என்று தோழியர் வற்புறுத்திக் கேட்க, "பிறர்க்கு மறைத்து உங்கட்குச் சொல்லக்கூடிய வார்த்தை ஒன்றும் எனக்குத் தோன்றவில்லையே எனது நிலைமையை நீங்கள் கண்ணால் காண்கின்றீர்கள் அன்றோ? திருவேங்கட முடையானைச் சென் று சேவித்துவருவோம் என்று நினைத்த அளவிலே இந்நிலை எய்தினேன் காண்மின்' என்று அவர்கட்குமறு மாற்றம் உரைப்பதாகவுள்ளது முதற் பாசுரம் (1). ஒவ்வொருபாசுரத்தையும் உரை நோக்கி அநுபவிக்க வேண்டும். விரிவஞ்சி இத்துடன் இப்பாசுரத்துடன் நிறுத்தப் பெறுகின்றது. . - 11. “இன்னுயிர்ச் சேவலும் (9.5) : ஈட்டின் அவதாரி கையில் நம்பிள்ளை கூறுவது; தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்’ (9.4.9) என்று களித்தவர், தம்முடைய உயிரைப் பாதுகாப்பதற்குப் பறவைகளின் காலிலே விழும்படியாயிற்று. தேவர்கட்கு எல்லாம், கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே' (9.47) என்னும்படி தெளிவு பிறந்தபோதே புறத்திலே காண வேண்டும் என்ற ஆசை பிறந்தது. இவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்டவேண்டும் என்று இவர் விருப்பத்தைச் சடக்கென முடித்திலன் இறைவன். நினைத்த போதே விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்; தளர்ந் தவர் உலகப் பொருள்களிலே கண்வைத்தார். பரம விரக்த ராக இருக்கும் இவர் உலகப் பொருள்களில் கண்வைப்பான் என்? என்னில்: உலகப் பொருள்களை நினைக்கும்