பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சடகோபன் செந்தமிழ் 13. மல்லிகைகமழ் (9.9) : நம்முடைய முதலிகள் இத் திருவாய்மொழியை "மாலைப்பூசல் என்று வழங்குவர். இதன் இறுதிப் பாசுரத்தில் மாலைப் பூசல் என்று வருவது காண்க. பின்னர் வரும் பத்தாம் பத்தில் வேய்மருதோளினை மெலியுமாலோ (10.3) என்ற திருவாய்மொழிக்குக் 'காலைப் பூசல் என்று நம் ஆசாரியர்கள் வழங்கும் திருநாமம். கண்ண பிரான் விடியற்காலத்தில் பசுமேய்க்கப் போனானாக அதிசங்கை பண்ணி அவன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க் கப் போனால், நலியக்கடவ பதார்த்தங்கள் நலியா நின்றன என்று முறையிடுவது காலைப் பூசலான அத்திருவாய் மொழியிலே மாலைப் பூ ச லா ன இப்பதிகத்திலோ வென்னில் காடுகளுடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடல் பூச்சூடி வருகின்ற தாமோதரன்' மாலைப் பொழுதிலே திருவாய்ப்பாடியேறத் திரும்பி வரும் போது சில நாட்களில் பசுக்களையெல்லாம் பின்னே வர விட்டுத் தான் முன்னே குழலூதிக் கொண்டுவருவான்; சில நாட்களில் பசுக்களை முன்னே போகவிட்டுத் தான் பின்னே வருவது முண்டு. அப்படிவருகின்ற நாளில் அப்பெருமானைப் பசுக்களின் முற்கொழுந்தில் காணாமல் திருவாய்ப்பாடியில் பெண்கள் பட்டபாட்டை ஆழ்வார் தாம் ஏறிட்டுக் கொண்டு சொல்லுகின்றது இத்திருவாய்மொழி. நம்பிள்ளை ஈடு : படைவீட்டிலிருந்தால் மா மி யார் மாமனாருக்குக் கூசிப்பெருமாளுடன் நினைத்தபடி பரிமாறப் போகாதென்று காட்டிலே ஏகாந்தமாய் அநுபவிப்பதாக மனோரதித்துப் போந்த பிராட்டியை "மனிதர்கள் இல்லாத காட்டின் நடுவிலே விடப் பெற்ற இளம் பெண் போன்று, அந்தச் சீதை அழுதாள்’ என்கின்ற படியே, கூப்பிடச் செய் தாற் போன்று, திருநாவாய் என்ற திவ்விய தேசத்திலே புக்கு அநுபவிப்பதாக எண்ணம் கொண்ட இவர்க்கு துன்புறுத்துகின்ற பொருளுக்கு (பாதகவர்க்கத்துக்கு) அஞ்சிக் கூப்பிடும் படியாய் விளைந்தது” என்பது.