பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 சடகோபன் செந்தமிழ் வெம்சிறைப்புள் உயர்த்தார்க்கு என்விடு துதாய் சென்றக்கால் வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமே (1) (மடம் - இளமை புள் - கருடன்; வைப்புண்டால் ఉ4 அநுபவித்திருப்பாயானால்) என்பது பாசுரம். குழந்தை தாயினுடைய எல்லா உறுப்பு களையும் விட்டு முலையிலே வாய் வைப்பது போல, இங்கு நாரையின் மற்றைய உறுப்புகளை விட்டு அதன் சிறகிலே கண் வைப்பது விரைந்து செல்வதற்கு அதுவே சாதனம் என்பது பற்றி. சொன்ன சொல் மறுக்காமல் உடனே புறப்படத் தயாராக இருப்பதுபோல் ஆழ்வார் கண்ணுக்குத் தோற்றியதால் மட என்ற அடைமொழியால் சிறப்பித் தார். நாயகன் விடுகின்ற தூதைக் காட்டிலும் நாயகி விடுகின்ற தூதுக்கு ஏற்றமுண்டு. இராமனால் தூது விடப் பெற்ற சிறிய திருவடிக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. பிராட்டியின் தூதனாக அவன் இராமனிடம் மீண்டு வந்த போது அவனுடைய திருமார் போடே அணைக்கப்பெற்றான். நாரையின் உள்ளும் புறமும் வெண்மையாக இருப்பது போல் ஆசாரியர்களும் தூய்மை வாய்த்த மனம் மெய் மொழிகளை யுடையவர்கள் என்பது நாரையின் உள்ளுை றப் பொருள். நாரையைத் தூது போகுமாறு இரந்த தலைவி, அங்குச் சென்றால் சொல்ல வேண்டிய செய்திகளைச் சில குயில் களுக்குக் கூறுகின்றான். ஒருவரை அழைத்து விட்டு மற்றொருவருக்குச் செய்தி சொல்லுகின்ற போக்கிலிருந்து ஆழ்வார் நாயகியின் மிகுதியான கலக்கம் நன்கு புலனாகும். இத்தகைய கலக்கத்தை உண்டுபண்ணியது விஷயாந்தரங் களை விட பகவத் விஷயத்தில் உண்டான ஏற்றம். இனக் குயில்கட்கு ஆழ்வார் நாயகி கூறும் செய்தி :