பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை 299 முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன்செய்த் முயலாதேன் அகல்வதுவோ விதியினமே (2) (முன் - எனக்குத் தெரியாத காலம் முதலாக, வினை பெரும்பாவம்; குற்றேவல் - அடிமைத் தொழில்) என்பது. அநாதி காலமாகத் திரட்டின பாவத்தாலே திருவடி வாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுவதற்கு ஏற்கெனவே முயலப்பெறாத நான் அகன்று போக வேண்டியதுதானோ? என்று கேளுங்கள்” என்கின்றாள். முழுவினை : என்றவிடத்து நம்பிள்ளை காட்டும் ஒர் ஐதிகம் : பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருந்த காலத்து அங்குத் தெற்காழ்வான் என்றும், கோளரியாழ்வான் என்றும் இருவர் வாழ்கின்றனர். கோளரியாழ்வான் நற்குண நல்லொழுக்கமுடையவன்; தெற்காழ்வான் சாதாரணமாகக் காணப்பெறும் ஒரு மனிதன். இருவரும் ஒரு சிறப்பான திதி யன்று ஒரு குளக்கரையில் சந்திக்கின்றனர். கோளரியாழ்வான் தெற்கா ழ்வானை நோக்கி, 'அப்பா, இன்று புண்ணிய தினமாயிற்றே. இன்றாகிலும் ஒரு முழுக்கிட மாட்டாயா?” என்கின்றான். அது கேட்ட தெற்காழ்வான், 'முழுக்கிட வேணுமென விதிக்கின்ற உன் அபிப்பிராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் சில தொலையக் கூடும் என்பதுதானே; அந்தோ! என்னுடைய பாவம் திருக் கோட்டியூர் செளமிய நாராயணப் பெருமாளுடைய திருக்கையிலுள்ள திருவாழியால் போக்கினால் போகுமே யல்லது ஒன்றிரண்டு முழுக்கால் போகக் கூடியது அன்று காண்!” என்கின்றான், இச்சொற்கள் பட்டருடைய திருச் செவியில் விழுந்த அளவில், 'ஆ'ஆ!! எவ்வளவு ஆத்திகனா இருந்தால், இந்த வார்த்தை சொல்ல முடியும்? இவனை மேலெழுந்தவாரியாகப் பார்த்து நாத்திகன் என்று நினைக்