பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi இந்தப் பக்திப் பனுவலுக்குச் சிறப்புப் பாயிரமாலை" வழங்கிச் சிறப்பித்தனர் புதுவைப் பல்மருத்துவர் திரு. மு. இராதாகிருட்டிணன் என்பார். இளமையில் பாவேந்தர் பாரதிதாசனாரிடம் நன்னூல், யாப்பு, சிற்றிலக்கியங்கள் பயின்று கவிதைஇயற்றக் கற்றவர். புதுவையில் பல பெரியார் களிடம் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் இவற்றை முறையாகப் பாடங்கேட்டுப் பயின்றவர். வைணவப் பெரியார்களிடம் திவ்வியப் பிரபந்தம் முழுவதும் முறை பாகப் பாடங்கேட்டு கி.ணர்ந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் விந்துவான்’ பட்டம் பெற்றவர். பிரெஞ்சு மொழி நன்கு பயின்றவர்; ஆங்கிலமும் நன்கு அறிவார். புதுவை அரசுப் பொது மருத்துவ மனையில் பல ஆண்டு பல் மருத்துவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் இயற்றிய சித்த மருத்துவம் பற்றிய பல பாடல்களைக் கண்டு மகிழ்ந்த பாவேந்தர் இவருக்குச் சித்தன் என்றே பெயரிட்டு வாழ்த்தியுள்ளார். பாவேந்தரின் குயில் இதழில் இவர் பாடல்கள் வெளிவந்தன. அந்த இதழ்ப் பணியில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்ட பெருமகனார் இவர். இவர் கலந்து கொண்ட பாட்டரங்கங்கள் எண்ணற்றவை. ஆற்றிய சொற்பொழிவுகள்-குறிப்பாகச் சமயச் சொற் பொழிவுகள் கணக்கிலடங்கா. இவர் கலந்து கொள்ளாத வைணவ அரங்குகளே இல்லை எனலாம். இவருக்குக் கம்பனில் ஈடுபாடு மிக்குண்டு. கம்பன்விழாக் கவியரங்குகளில் இவர் கொண்ட பங்கு மிகப் பெரிது. பல்லாண்டுகட்கு முன்னர் வைணவ சீலர் திரு இரா. தேசிகம்பிள்ளை அவர்களுடன் இணைந்து திருமால் திருநெறி மன்றத்தைச் சிறப்புடன் நடத்தியவர். கடந்த பதினொரு ஆண்டுகளாகப் புதுவை பூர்மத் இராமாநூஜ நாவலர் கவாமி கள் மன்றத்தை அதன் செயலராக நின்று சீருடனும் சிறப்பு டனும் இயக்கி வருபவர். இவை தவிர புகழ்பெற்ற புதுவைக்