பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 சடகோபன் செந்தமிழ் இருவாராதனம் படைக்க ஆற்றலற்றவராய் அந்திம தசை அடைந்தார்; பெருமாள் சந்நிதி முன்பே தண்டன் சமர்ப்பித்துத் திருத்திரையை நீக்கச் செய்து 'சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்; இனி உனது வாய்லகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே” என்று கைகூப்பி விண்ணப்பம் செய்தாராம்."அடியேனோ ஆசாரியன் திருவடி அடையா நின்றேன்: இனித் திருவாராதனம் கண்டருளப் பண்ணுவாரைத் தேடிக் கொள்ளாய்” என்பது குறிப்பு. அடுத்து இப்பதிகத்தில் அன்றில்கள், சிறுகுருகு, வண்டு, கிளி, வாடைக் காற்று, நெஞ்சு ஆகியவற்றைத் தூது விடுப்பதாகவுள்ள பாசுரங்களின் நயங்கள் விரிவஞ்சி விடப் பெற்றன. 2. விபவத்தில் தூது வைகல் பூங்கழிவாய்" (6.1) என்ற திருவாய் மொழி விபவாவதாரத்தில் தூது விடுவதாக அறுதி யிடப்பெற்றுள்ளது. மணவாள மாமுனிகள் தம் நூற்றந் தாதியில் வைகல் திருவண்வண்டுர் வைகும் இராமனுக்கு (61) என்று அருளிச் செய்ததும் இது கருதியே. திருவண் வண்டுரில் தூது விடுகிற படியால் இஃது அர்ச்சாவதாரத் தில் தூது’ என்று கொள்ளலாமோ என்னில்: இத்திருவாய் மொழியின் பாசுரம் ஒன்றில் மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த, ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் உளள் என்மின்களே (10) என்று அமைந்திருக்கும் படியை நோக்கியும் அர்ச்சாவதாரத் து துப் பதிகம் வேறொன்று இருப்பதை நோக்கியும் ஆசாரியர்கள் "இதனை விபவாவதாரத்தில் தூது’ என வகை செய்தது மிகவும் பொருத்தம் என்பது போதரும். இத்திருவாய்மொழியில் பராங்குச நாயகி குருகு, நாரை, புள்ளினம், அன்னம், குயில் கிளி, பூவை, வண்டினம் ஆகிய பறவைகளைத் தூதுவிடு வதைக் காண்கின்றோம். > ر--- -