பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 சடகோபன் கெந்தமிழ் (மாமதுவார் . பெருவெள்ளமாக மது ஒழுகுகின்ற, வானவர் கோன் - நித்திய சூரிநாதன்) என்ற பாசுரத்தை உயிராகக் கொண்டு பரத்துவத்திலும், எங்குச்சென் றாகிலும்கண் * டி.துவோதக்க வாறென்மினே (5) (எங்கு ஆகிலும் எல்விடத்திலாவது, கண்டு - சேவித்து) என்ற பாசுரத்தைக் கொண்டு அந்தர்யாமித்துவத்திலும் என்று துரதுவிட்ட படியாம் என்று அறுதியிட்டுரைப்பர்." எம்பெருமான் தனது விபூதிகளை யெல்லாம் ஞானியர் களுடையதாக இலச்சினைப்படுத்தி வைத்திருக்கையாலே அந்த ஞானியரின் ஆணையின்றி ஒருவர்க்கும் ஒன்றுங் கொடான், இவ்வர்த்தகங்களையெல்லாம் ஆழ்வார் இங்கு 'பொன்னுல காளிரோ? புவனிமுழுதாளிரோ? என்ற கம்பீரமான பாசுரத்தினால் மெய்ப்பிக்கின்றார், புள்ளினங் களை நோக்கிப் பேசுகின்றார் ஆழ்வார் நாயகி. பொன்னுல காளிரோ: புவனி முழுதா னீரோ! நன்னயப் புள்ளினங் காள்வினை பாட்டியேன் கானிரந்தேன். முன்னுல கங்க ளெல்லாம் படைத்தமுகில் வண்ணன்கண்ணன் என்னலம் கொண்ட பிரான்தனக்கு, என்னிலைமை யுரைத்தே(1) பொன்னுலகு - நித்திய விபூதி; புவனி லீலாவிபூதி: நல் நலம் - சிறந்த குணம், புள்ளினம் பறவைத் திரள்; வினையாட்டியேன் - பாவியான நான்; முன்முதலில் முகில் வண்ணன் - காளமேக நிறத்தன்) 10. ஆ. ஹி. 156 (விளக்கம் காண்க)