பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31? சடகோபன் செந்தமிழ் எம்பெருமானின் நான்கு சிறப்புகளை நவில்கின்றாள்: (1) 'பிரானே, நீ உலகங்களை யெல்லாம் படைத்தவன் செடிவைத்தவன் தண்ணிர் வார்ப்பான்’ என்பது போல் 'படைத்த நீ அளிக்கவும் வேண்டாவோ?’ என்று சொல்லுங் கள்; (2) பிரானே, நீ முகில் வண்ணன் அல்லையோ? நின் வடிவழகைக்காட்டி ஈடுபடுத்திக் கொண்டபின்பு மேன் மேலும் அவ்வழகைக் காட்ட வேண்டாவோ? என்று சொல்லுங்கள்: (3) பிரானே, நீ கண்ணனாக அவதரித்த காலத்தில் ஒவ்வொருவருக்கும் கையாளாய்" இருந்தாய்; இப்போது ஒருத்திக்கு அருமைப் படுவது தகுதியோ? என்று சொல்லுங்கள்: (4) பிரானே, ஒருத்தியை இங்ங்னம் முழுவதையும் அபகரித்துக் கொள்ளையடிப்பது பாங்கோ? என்று சொல்லுங்கள்’’ என்று புள்ளினங்கட்குப் பணிக் கின்றான், அடுத்து, கிளிகளை நோக்கிப் பேசுகின்றாள் பராசங்குச நாயகி, - மையமர் வாள்கெடுங்கண் மங்கைமார் முன்புஎன் கையிருந்து கெய்யமர் இன்னடிசில் கிச்சல் பாலொடு மேவிரோ? கையமர்சக்கரத்துஎன் கனிவாய்ப்பெரு மால்னக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்!விரைந் தோடிவந்தே (2) (மையமர் - மையணிந்து; மங்கைமார் - தோழிமார்; முன்பு - முன்னிலையில்; நெய்யமர் - நெய்யோடு பொருந்திய, நிச்சல் - தினந்தோறும். மேலிiர். உண்ணவேண்டும்; கனி - கொவ்வைக்கனி: மெய் அமர் - உடம் போடு அணைய வேண்டும்படி) 11. பாரதியார்; கண்ணன் - என் சேவகன் ஈண்டு அதுசந்திக்கத் தக்கது. - -