பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 சடகோபன் செந்தமிழ் கிளி தனக்குக் கற்பித்ததையே சொல்லுமாப்போலே, முன்னோர் மொழித்த முறை தப்பாமல் கேட்டுப்பின் ஒர்ந்து தாம் அதனைப் பேசுபவர்களாயும் இருப்பவர்கள் கிளியாகப் பேசப் பெறுபவர்கள், இன்னொரு பாசுரத்தில் (5) யான் வளர்த்த கிளிகாள்!" என்கின்றாள்! நெய்அமர் இன்னடிசில் நிச்சல் பாலொடும் ஊட்டி வளர்த்ததைச் சொல்லிக் காட்டு கின்றாள். 'வளர்த்ததனால் பயன் பெற்றேன்: வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே (திருநெடுந். 14) என்கின்றாள் எங்கள் தோழிமார்களுள் ஒருத்தி; அப்படியே நானும் கை கூப்பி வணங்கும் படியாகக் காரியம் செய்யுங்கள்' என்கின்றாள். - பின்னர் சில பூவைகளைத் தூது விடுகின்றாள் பராங்குச நாயகி. - - - என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெரு மான் என் கண்ணன் தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் கமக்கன்றி கல்கான் - கன்மின்கள் என்றுஉம்மையான் கற்பியா வைத்தமாற் றம்சொல்லிச் சென்மின்கள் தீவினை யேன்வ ளர்த்தசிறு பூவைகளே (6) (மின்னு நூல் - பூணு நூல்: கழல் - திருவடி, கன்மின்கள். கற்றுக் கொள்ளுங்கள்) இதில் 'தன் ஒப்பனை யழகாலும், வடிவழகாலும் என்னை ஈடு படுத்திக்கொண்ட எம்பெருமானிடம் சென்று 'இதுவோ தக்கவாறு? என்று செல்லுங்கள்' என்கின்றாள். திருத்தமாயை அவர் பல அவயவங்களிலும் அணிந்து கொள்வர்; எதை எவருக்குக் கொடுத்தாலும் அடிமேல் புனைவது அடியார்களுக்கே யாகையால் திருவடிகளில் சாத்திய திருத்துழாயை நமக்கன்றி மற்றையோர்க்குத்