பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 சடகோபன் செந்தமிழ் கொங்கார்பூந் துழாய்முடியெங் குடக்கூத்தர்க் கென்து தாய் துங்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே(1) (கானல் - கடற்கரைச்சோலை; அகம் கழி-உள்ளிருக்கும் கழி: கொங்கு-தேன்: கெழுமீரோ-சேர்கின்றீர்களா) பறவைகளைத் தூது விடுகின்ற இத்திருப்பதிகத்தின் முதற் பாசுரத்திலேயே ஆசாரியர்களே. பறவைகளாகக் கருதப் பெறு கின்றனர். என்பதைத் தெளியவைத்தருள்கின்றார் ஆழ்வார். தும்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே' என்னும் சற்றடி அமைந்த அழகு மிகவும் அற்புதமானது. திருவிருத்தத்தில் தூது போகைக்கு வண்டுகளை அழைக்கும் போது (54) எம்பெருமானுடைய திருவடியிணைக்கீழ் தம்மைச் சேர்ப்பிக்கவல்ல ஆற்றல் வாய்ந்த ஆசாரியர் களையே தூதர்களாகக் கொண்ட அருமைப் பாட்டை நன்கு காட்டியருளினார். அப்படிப்பட்ட ஆசாரியர்கள் தம் கற்றத்துடன் தம் தலைமீது திருவடிகளை வைப்பதே பெறற்கரிய பேறு என்பதை இத்துதுப்பதிகத்தில் உயிராக வைத்து அருளிச்செய்கின்றார். செங்கால மடநாராய்! என்று கால்களைச் சிறப்பித்துச் சொல்வதால் "ஆசாரி யசின் திருவடிகளே தஞ்சம் என்ற தொனிப் பொருளைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். அகங்கனிவாய் இரை தேர்ந்து அந்தரங்கமாய் வந்து இருக்கிறபடியைச் சொன்ன வாறு. 'தூதனுப்ப உங்களைத் தேடிப்பிடிக்க வேண்டாதபடி அருகே வந்து இருக்கப் பெற்றபேறு என்னே!” என்று உள் குழைந்து சொல்லுகின்றாள். உள்ளுறையில் ஆசாரியர் களைத் துதுவிடுவதாகச்சொல்லுகையாலே எம்பெருமானார் திருமாளிகையிலேயே வந்திருந்து காலட்சேபம் செய்தருளின பெரிய நம்பிகளைப் போன்ற ஆசாரியர்களை இங்குக் கருதுவதாகக் கொள்ளலாம்.