பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 சடகோபன் செந்தமிழ் பெருமானுடன் வாழும்படிச் செய்யவேண்டாமா? என்பது குறிப்பு. “குறைவாளர் காரியம் குறைவற்றார்க்குத் தீர்க்க வேண்டாவோ? உண்டார்க்குப் பட்டினி கிடந்தார் பசி பரிகரிக்கப் (நீக்கற்குப்) பிராப்தமிறே' என்பது. ஈடு அணி மூழிக்களத்துறையும் தம்மால் இழிப்புண்டு எமராலும் பழிப் புண்டு இங்கு ஏன்?" என்று அந்வயித்துப் பொருள் கொள்ள வேண்டும். 'திருமூழிக்களத்து நாயனார் யாத்ருசிகமாக (யாரோ ஒருவர் இச்சையில் உண்டாவது) ஒரு கால் கலந்து கைவிட்டார். இப்படி அத்தலைக்குமாகாதே உறவினர்க்கு மாகாதே கைவல்யம் போலிருக்கிற இவ்விருப்புக்கு என்ன பயன்?’ என்கின்றாள். - - - அடுத்து கொக்கினங்களையும், குருகினங்களையும் வேண்டுகின்றாள் ஆழ்வார் நாயகி. எம்பெருமானிடம் இரண்டில் ஒன்று கேட்டுவந்து கூறுமாறு குறிப்பிடுகின்றாள். தக்கிலமே கேளீர்கள்; தடம்புனல்வாய் இரைதேடும் கொக்கினங்காள்! குருகினங்காள்! குளிர்மூழிக் களத்துறையும் செக்கமலத்து அலர்போலும் கண்கைகால் செங்கணிவாய் அக்கமத்து இலையோலும் - திருமேனி அடிகளுக்கே(3) |குருகு.கொக்கில் ஒருபிரிவு (கொய்யடிநாரை), கமலம் தாமரை, திருமேனி அடிகள்-எம்பெருமான்i என்பது பாசுரம். இஃது இப்பதிகத்திற்கு உயிரானது. தம்மை அடைந்த அடியார்களுடன் உண்டான சேர்க்கையின் இனிமையால் பிரிந்தார்க்கு உயிர்தரிக்க வொண்ணாதபடி யிருக்கும் தம்முடைய வடிவழகை மறந்து தன்ன்ை நின்ையா திருத்தல் கூடும் என்பது அவளது உட்கிடக்கை. இவ்வடி