பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாக்ரங்கள்-துதுபற்றியவை 莺笃 என்று அருளிச் செய்வர். அப்படிப்பட்ட திருமேனியை இழந்து உங்கள், காலில் விழும்படியான தீவினையேன்” ஆயினேனே' என்கின்றாள். எதிர்மறை இலக்கணையால் நல்வினையேன்” என்பது குறிப்பு. பரமன் அடியார்களின் திருவடியில் வீழ்தல் நல்வினைப் பயனன்றோ நான் விடு துதாய் நீங்கள் திருமூழிக்களத்திற்கேகி அத்திருமேனி அடிகளை நோக்கி, திருப்புளியடியிலே கிடக்கின்ற ஒருத்தி உம்முடைய திருமேனியில் ஆசை வைத்து நைகின்றாள்; அவருக்கு உமது திருமேனி கொடுத்தருள்வீர் என்று சொல்லுவீர்களாக என்று குறையிரக்கின்றாள். இச் சொல்லுதவி புரியின் அவர்கள் புதிய பொலிவினைப் பெற்றுத் தெளிவிசும்புப் பேறும் பெறுவர் என்கின்றாள். மேலும், மேகங்களை நோக்கி இவ்வாறு பேசுகின்றாள் : தெளிவிசும்பு கடிதோடித் தீவளைத்து மின்இலகும் ஒளிமுகில்காள் திருமூழிக் களத்துறையும் ஒண்ன்டர்க்கு தெளிவிசும்பு திருகாடாத் தீவினையேன் மனத்துறையும் துளிவார்கட் குழலார்க்கு z என் தூதுரைத்தல் செப்புயினே (5) தி. மின்னல், தெளிவிசும்பு - பரமபதம், துளிவார்கள் குழல்-துளித்து ஒழுகும்தேனினையுடைய மயிர்முடி) இங்கு மேகங்களை ஆசாரியர்களாகக் கொள்ளவேண்டும். விண்ணில் விரைவாகச் சந்தித்தலும் கொள்ளிவட்டம் போல் மின்னல் விளங்கப்பெறுதலும் முகில்களின் இயல்பு. ஆசாரியர்கட்கும் லீலாவிபூதி, நித்திய விபூதி என்ற இடங்களில் சஞ்சரிக்க வல்லமையுண் தலால் தெளி விசும்பு கடிதோடுகை அவர்கட்கும் பொருந்தும் நன்றாக மழைபொழியும் சமயத்தில்தான். ஒழேகத்தில், மின்னல்