பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இறையநுபவம் கருவூரிலிருந்தபோதே ஞானத்திரு உடையவர். கருஅரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் (முத. திருவந்.6) என்று பொய்கையாழ்வார் கூறுவது போலவும், கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன்' (இரண். திருவந், 87)என்று பூதத்தார் கூறுவதுபோலவும் இவர் கருவிலேயே திருவுடையவர். உறையூருக்கு வந்த பிறகும் இவர் ஒதாது உணர்ந்த ஞானச் சிறப்புடையவர் என்று வரலாறு கூறுகின்றது. அறிவு தோன்றுதற்குரியதல்லாத மிக்க இளம்பருவத்திலேயே இவ்வாழ்வார் இறைவன்பால் பேரன்பு கொண்டவர் என்பதை, அறியாக் காலத்துள்ளே அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால் --திருவாய் 2.3:3 என்ற இந்த ஆழ்வாரின் திருவாக்காலேயே அறியலாம். அறியாக்காலந்தொட்டு இறைவனிடத்து உண்டாகிய ஆழ்வாரின் அன்பு நாளுக்கு நாள் பெருகி வளர்வதாயிற்று. இறைவனை நினைத்தல், அவனை அன்போடு வணங்குதல் என்பன போன்ற செயல்கள் ஒருவித கடமையோடு நடைபெறுவன என்று இல்லாமல், அவை அவரது இயல் பாகவே அமைந்துவிட்டன. அவனை நினைக்காமல் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுவிட்டது. மக்கள் உணவின்றி