பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையதுபவம் 327 உயிர்வாழ இயலாதவராக இருப்பது போல, ஆழ்வார் எம்பெருமானை நினையாதிருக்க-அன்பை விட்டிருக்கஇயலாதவராகி விட்டார். அடியேன்.கான் உண்ண நாள்பசி யாவதொன் றில்லை; ஓவன் தே'நமோ காரணா!' என்று எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுண பாதம் கண்ணா தாள்.அவை தத்துறு மாகில் அன்றெ னக்கவை பட்டினி காளே - -பெரியாழ்.திரு 5.1:5 (நண்ணா - கிட்டாத) என்பதில் விட்டுசித்தன் நான் உண்ணாதபோது பசி என்பது சிறிதும் உண்டாவதில்லை: இடைவிடாமல் நமோ நாராயணா' என்று சொல்லாத நாளும் நான்கு மறை களை நாவினால் நவிற்றிக் கொண்டும் அப்போதலர்ந்த மலர்களை எடுத்து வந்து நின் திருவடிகளைக் கிட்டாத நாட்களும்தான் என் பட்டினி நாள் என்று சொல்வதுபோல் ஆழ்வார் நிலை ஏற்பட்டுவிட்டது. எம்பெருமான் நினைவு அவர் உள்ளத்தில் இன்ப ஊற்றாகி விட்டது. அதனால் நம் முன்னோர் ஆழ்வார் பிரபத்தியை மேற்கொண்டவரே; ஆனால் பக்தி அவருக்கு) தேக யாத்ராசேஷம் (பக்தியின்றி உயிர்வாழ இயலாதவர்) என்று அறுதியிட்டு உரைத்தனர். மக்கள் இரண்டு வழிகளில் இன்பம் அடைகின்றனர். ஒன்று, ஐம்பொறிகளால் அறிதற்குரிய பொருள்களை அநுபவிக்கும்பொழுது உள்ளத்தில் இன்பம் உண்டாகின்றது. தமக்கினிய உறவினர்கள், நண்பர்கள், இனிய காட்சிகள் காணும்போதும் அறுசுவை உண்டிகளை உண்ணும்போதும், தம் மக்கள் மழலைச் சொற்கள், இன்னிசைக் கச்சேரி இவற்றைக் கேட்கும்போதும், கற்பமைந்த இல்லான்ோடு