பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சடகோபன் செந்தமிழ் உடலுறவு கொள்ளும் போதும் உள்ளத்தில் இன்பம் உண்டாகும். இங்ங்ணம் ஐம்பொறிகளால் ஏற்படும் இன்பமே பன்றி, இவற்றின் தொடர்பில்லாமலேயே உள்ளத்தில் இன்பம் உண்டாதலும் உண்டு. இதுவே மிக உயர்ந்த இன்பம்; மானச இன்பம். துன்ப நிகழ்ச்சிகளை அநுபவித்துக் கொண்டே மனத்தில் இன்பம் உண்டாதலும் உண்டு. நாடு விடுதலை பெறும்பொருட்டு நாட்டுப் பற்றாளர்கள் சிறை யில் அநுபவித்த துன்பங்களை இன்பமாகக் கொண்டார்க ளன்றோ? 'அஞ்சிறைய மடநாராய்!” (1.4: ) என்று தொடங்கும் திருவாய்மொழியில் வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ?’ என்ற அடியின் பொருளை விளக்குமிடத்தில் 'பரார்த்தமாகச் சிறை இருக்கும் இருப்பு கிடைக்கவேண்டுமே!’ என்றார் உடையவர். பரார்த்தமாகச் சிறையிருக்கும் இருப்பு உடலளவில் துன்பமாயினும் மன அநுபவத்தில் இன்பமாகும். பேரின்பமாகும்-என்பது யதிராசரின் கருத்தாகும்." இன்பமும் துன்பமும் அவரவர் உள்ளத்தில் உண்டாகும் ஒருவித கொள்கை. ஆதலால், உடல் தொடர்பின்றியும் உடலளவில் துன்பமிருப்பினும் மனத்தில் இன்பம் உண்டாதல் கூடும். வள்ளுவப் பெருந்தகையின் கருத்து ஈண்டு நினைத்தல் தகும். இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்துர்வது அ.தொப்பது இல் (621) என்ற குறளில் "துன்பம் வரும்போது சோர்ந்து அழியாமல் உள்ளத்தில் மகிழவேண்டும்; வந்த துன்பத்தை வெல்வதற்கு அதைப்போல் சிறந்த வழி இல்லை என்று. விளக்குவார். மேலும், 1. பதிராசர்-துறவிகளின் தலைவர். இவர் இராமாதுசர், இவருக்கு உடையவர், எம் பெருமானார் என்ற திருநீர்மங்களும் உண்டு.