பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையதுபவம் 33; 'உள்ளும்தோறும் தித்திக்கும் அவனை இடைவிடாது நினைப்பதனால் உண்டான தெவிட்டாத உணர்ச்சி பெருகி வளரவே அஃது உள்ளடங்காத நிலையில் இறைவனைப் பற்றிப் பாடத் தொடங்கினர். கண்டுகொண்டு என்கண் இணை ஆரக் களித்து பண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் அண்டத் தமரர் பெருமான் அடியேனே (9.4:9) என்பது அவர்தம் திருவாக்கு. இங்கு ஆழ்வார் கண்டு கொண்டு என் கண் இணை ஆரக் களித்ததெல்லாம் தம் ஞானக் கண்ணால் கண்டவையேயாகும் என்றும், அவர் அநுபவமெல்லாம் மானசாநுபவம் என்றும் நம் முன்னோர் முடிவு கொண்டனர். அந்தக் களிப்பே, எக்களிப்பே, சொல் மாலைகள் வடிவம் பெற்றது. இவர்தம் பாசுரங்களில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மலர்: ஒவ்வொரு திருப் பாசுரமும் ஒவ்வொரு மாலை. அச்சொல்வின் பொருள் அம்மலரின் நறுமணம், நறுந்தேன் ஆகும். சொல்லென்னும் பூம்போது தோன்றிப் பொருள் என்னும் நல்லிருக் தீக்தாது காறுதலால்" என்ற கவிமரபு இக்கருத்தினை அரண் செய்யும். - கருவூரிலிருந்து உறையூருக்கு வந்த பிறகு இவர் இறைவனிடத்து கொண்ட காதல் ஆராக் காதல். இதனை 2. பததுப்பாட்டு - மதுரைக் காஞ்சி. இறுதி வெண்பா