பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையநுபவம் - 333 இந்த அவாவின் தன்மை யாது? விரும்பிய பொருளை அநுபவித்து முடியாதது அவாவாகும். (அவா . ஆசை). விரும்பிய பொருளை அநுபவித்து முடிவடையாதது ஆசையாகும் ஒரு பொருளைத் தொடர்ந்து அநுபவிக்க அநுபவிக்க அவா.பெருகுவதல்லாது முடிவடைவதில்லை. பிற காரணங்களால் அவ்வநுபவத்திற்கு இடையூறு நிகழ்ந்தால் ஒருவேளை அவ்வாசை தணிவதல்லது அநுபவித்தலால் முடிவடையாது. சிறந்த எடுத்துக் காட்டுகளாக மது அருந்துதலையும் மங்கையர் இன்பத்தையும் கூறலாம். அநுபவிக்க அநுபவிக்க மேலும் விறகு இடப்பெற்ற நெருப்புப்போல் அந்த அவா பெருகுவதல்லது தணியாது என்பர் வள்ளுவப் பெருந்தகை (குறள் -343 உரைகாண்க). அதனால் அவ்வாசையை முயன்று தடுத்தே ஒழித்தல் வேண்டும். இதனால் வள்ளுவர் பெருமான் அந்த ஆசையின் தன்மையை ஆராஇயற்கை அவா (குறள் 370) என்று சுட்டிக் காட்டுவர். ஆழ்வாரின் அவாமுழுவதும் ஆரா அமுதமாகிய ஆண்டவன்பாலே செல்லுவதாயிற்று. இதனை அவரே ஆராத காதல் குருகூர்ச்சடகோபன் (2.111) என்று குறிப் பிடுவர். இவர்தம் இந்த இயல்பினை இவரது பிற பாசுரங் களாலும் ஒருவாறு அறியலாம். ஞானக் கண்ணால் கண்ட இறைவனை ஊனக் கண்ணாலும் காண விழைந்து கண்ணிர் பெருக நெஞ்சம் நெக்குருகிப் பன்முறை கூவிக்கவி அவனை அழைக்கின்றார் ஆழ்வார். என்றும், இந்தக் கிளவி மள்ளர்குழிஇய விழர்வினானும், மகளிர்தழிஇய துணங்கையானும், யாண்டுங் காணேன் மாண்டக்கோனை” (குறுந்.31ஆதி மந்தியார்) என்று அகத்தமிழினும் சொல்லப் பட்டது என்றும் விளக்குவர். (இக்குறுந்தொகை நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது).-ஆழ்வார் பாசுரம் - நாயகனைக் காண நாயகி விரைந்து பேசும் பாசுரம்,