பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சடகோபன் செந் தமிழ் ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து “ ஈரகெல் வித்தி முளைத்த கெஞ்சப் பெருஞ்செய்யுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனிகங் கண்ணன் தோழி! கடியனே. (5.3:4). (டிவ்வை . பழமொழி; நீர் :படுத்து - நீரைப் பாய்ச்சி; ஈரம் நெல் ஆசையாகிய நெல்; செய் - வயல்: பேரமர் - பெரிய ஊர்ப் பூசல்; கார் அமர் - கார் கால மேகத்தின் நிறம் பொருந்திய, கடியனே. கடியனோ (கடியனல்லன்) - இது பிரிவற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதலை நுவல்வது. எம்பெருமான் இப்பராங்குச நாயகிக்கு காதலை விளைவித்த விவரம் இப்பாசுரத்தில் விரிவாகச் சொல்லப் பெறுகின்றது. ஊர் மக்கள் சொல்லும் பழிமொழியையே காதலுக்கு எருவாக இட்டான் எம் பெருமான். ஊரார் பழிசொல்வதைக் கொண்டே இவள் பகவான் மீது கொண்ட காதலை அன்னை அறிந்து இத வசனங்கள் சொல்ல ஆரம்பித்தாள்: இந்த வசனம் தண்ணிர் பாய்ச்சினபடியாயிற்று. எருவானது அடியில் ஒருகாலே விட்டு விடுவது; நீர் மாறாமல் பாய்ச்சப்படுவது; இதனால் ஊரார் ஒரு கால் பழி சொல்ல அன்னை உடனிருந்து எப்போதும் பொடிந்து கொண்டே இருக்க, காதல் பயிர் செழித்து வளர்வதாயிற்று. ஈரநெல் - அன்பாகிய நெல். இதனை விளைவித்தவன் எம்பெருமான். இங்கு முளைத்த" என்றதை முளைப்பித்த என்றதாகக் கொள்ள வேண்டும் என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம். எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்குமிடத்து அவனருள் இன்றி.