பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையநுபவம் ^ ----- - - - - 337 யன்மயாததாகையாலே இங்கினம் கொள்ளத் தகுதியுண்டு. கேஞ்சப் பெருஞ்செய்யுள் : செய்' என்பது பயிர் விளையும் நிலம். பெருஞ் செய்யுள் என்று பெருமையையிட்டுச் சிறப்பித்ததற்கு:நம்பிள்ளை அருளிச் செய்தது: 'சம்ச்லேஷ விச்லேசங்களால்ே (கலவி பிரிவுகளாலே) புடைபடுத்தி தித்திய விபூதியோ பாதி பரப்புடையதாம்படி பெருக்கினா னாயிற்று” என்பது. பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த : இங்குக் கடல் புரைய’ என்றது, கடலின் மிகப் பெரிதால் என்னா நி ன் றது. *அதனில் பெரிய என் அவா (10.10:10) என்று ஈசுவரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது. ஆக பொய்ந்நின்ற ஞானம் (திருவிருத். 1) தொடங்கி இவ்வளவும் வர விளைவித்துக் கொண்டே காரியம் இதுவாயிற்று. கார் அமர் மேனி : அடியில்ே எருவும் இட்டு நீரும் பாய்ச் சினாலும் மேலே மழை பெய்தல் இல்லையாகில் அப்பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ? காளமேகத் திருவுருவை காட்டிக் காட்டி இக்காதலை வளர்த்துக் கொண்டுபோனான் என்பது தோன்ற விளைவித்த கார்அமர் மேனி என்றது. ஆழ்வார் நாயகியின் காதல் கடலையும் விஞ்சி நிற் கின்றது. எம்பெருமான் உருவெளிப்பாட்டில் காணப்பெறு கின்றான். அவனிடம் செல்ல வேண்டும் என்று துடிக் கின்றாள். - so * ... காலம் பெறஎன்னைக் காட்டுமின்கன் காதல் கடலின் மிகப்பெரிதால் நீல முகில்வண்ணத்து எம்பெருமான் கிற்கும்முன்னேவக்தென் கைக்கும் எய்தான் (7.3:6) (காலம்பெற - சீக்கிரமாக; முகில் வண்ணன்-மேக நிறம் படைத்தவன்) 22- ته