பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 - சடகோபன் செந்தமிழ் கடலளவுக்கும் மேலே வளர்ந்தி ஆழ்வாரின் பேரவா’ அதற்கு மேலும் வளர்ந்து பெருகுகின்றது. இதனைக் காட்டு கின்றது. பாசுரம். கண்டது வேகொண்டெல் லாருங் கூடிங் கர்க்கடல் வண்ணனோ டென் திறத்துக் கொண்டு அலர்துற்றிற் றதுமுதலாக் கொண்டஎன் காதல் உரைக்கில் தோழி மண்திணி ஞால மும் ஏழ் கடலும் கள்வி சும்பும் கழியப் பெரிதால் தென்திரை சூழ்ந்தவன் வீற்றி ருக்த தென்திருப் பேரெயில் சேர்வன் சென்றே(7.3:8) |கண்டதுவே வெளியில் காணப்பெறும் என் மேனி நிறம் முதலானவை; கூடி - ஒன்று சேர்ந்து; என் திறத்து என்னைப்பற்றி மண் திணி ஞாலம் - மண் செறிந்த பூமி, விசும்பு - ஆகாயம்; கழிய விட) . . . . . . . . . . . . . 'உங்கள் அலசினால் வளர்ந்த காதல் எப்படிப்பட்ட தென்றால், அணுக்கள் செறிந்திருக்கின்ற இந்த உலகத்தை யும் இதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களையும் இவற்றை யெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்ற ஆகாயத் தையும்விட மிக மிகப் பெரியதாகும்" என்கின்றாள் ஆழ்வார் நாயகி. இப்படிப்பட்ட ஆராக் காதல் பசியைக் கொண்டு நான் எப்படி, ஆற்றியிருப்பேன்; தென்திருப் பேரெயில் சென்று சேர்ந்து காதல் திர அந்த எம்பெரு, மானை அநுபவித்துக்களிப்பேன்." என்கின்றாள். இந்த நிலையிலும் எம்பெருமான் அருள் பாலிக்கவில்லை. ஆகவே ஆழ்வாருடைய கர்தல் மேலும் மேலும் வ கின்றது. அநேகிதத்துவத்தைய்ே விழுங்கிய ஆழ்வாரின் "ாதல் அதனைவிடப் பெரியதும் அடுத்த தத்துவமும் ஆகிய