பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 34? இதில் மிக்கஇறைநிலை என்பது ஈசுவர சொரூபம்; மெய்யாம் உயிர் நிலை என்பது, ஆன்ம சொரூபம்; தக்கநெறி என்பது: உபாய சொரூபம்; தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை யும் என்பது, விரோதி சொரூபம்; வாழ்வினையும் என்பது, வீடு பேற்றின் தன்மை: ஆக, இத்தனியன் அர்த்த பஞ்சகத்தைக் கூறுவதாகின்றது. இதனைச்சற்று விளக்கிக் கூறுவோம். சீமந் நாராயணனே அறப் பெரிய முதல்வன்; ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன் என்பதே சரணாகதி இறைவனைப் பெறுவதற்குரிய வழி: பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அமுக் குடம்பும் ஆகிய இவையே விரோதிகள்; ஒழிவில் காலமெல் லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே பரம புருஷார்த்தம் என்னும் இவ்வைந்து பொருள்களுமே திருவாய்மொழியில் சொல்லப் பெறுகின்றன. இவற்றைத் தனித்தனியாக விளக்குவோம். - - 1. ஈசுவரனின் இயல்பு : திருவாய்மொழியிலுள்ள "உயர்வற (1.1), திண்ணன் வீடு (2.2), அணைவது"(2.8), ஒன்றும் தேவும் (4.10) ஆகிய இந்த நான்கு திருவாங் மொழிகளும் எம்பெருமானுடைய சொரூபத்தை (Essential nature) ostá65&687. விளக்கம் முதல் திருவாய் மொழியில் உயர்வற அயர். நலமுடையவன்'(1) என்று தொடங்கி, உணர்முழுநலம்...... மிகுநரை இலன் (2), நிலன் இடை விசும்பிடையுருவினன் அருவினன்'(3), "ஆம் அல்ை ஆயவை ஆய் நின் ற அவர்.(4) என்று கூறிக் கொண்டு போந்து, கரவிசும்பு எரிவளி நீர் நிலம் இவைமிசை, வரன் நவில் திறல் வலி அளிபொறை ஆய்நின்ற, பரன்’ (11) என்று முடிக்கையாலே 'நாராயணனே பரம்பொருள் என்கைக்காக நாராயண சப்தத்தின் பொருளை அருளிச் செய்கின்றார். நாராயண