பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 353 கூடியது. நம்மாழ்வார் பிரபத்தியே தமது சித்தாந்தம் என்று உபதேசித்தார். பிரபத்தி' என்பது சரணாகதி தத்துவம். பிரபந்த ஜன கூடஸ்தர் என்று நம்மாழ்வாருக்கு ஒரு சிறப்புப் பெயர் உண்டு, பிரபத்தி நெறியை அதுட்டிக்கும் வைணவர் கள் யாவருக்கும் தலைவர் என்பது இதன் பொருள்.ஆழ்வார் பிரபத்தி பண்ணியது அர்ச்சாவதாரத்திலேயே." இனி, இந்த நெறியை விளக்குவோம், நோற்ற நோன்பு இலேன் (9.7 : 1) என்றும், ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5.7 :10) என்றும், உழலை யென்பின் பேய்ச்சி முலையோடவளை உயிருண்டான், சழல் களையே சரணாகக் கொண்ட (5.8 : 1) என்றும், நாமங் கள் ஆயிரமுடைய நம் பெருமான் அடிமேல், சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் (5.9 : (1) என்றும், நாகனை மிசை நம்பிரான் சரனே 蠢隸 ழக்கு (5.10 : 1) என்றும் சொல்லிக் கொண்டு.'ல்க்கோ பற்றுக்கொம்பு நின்னலாது அறிகின்றிலேன் (10.10 : 3) என்றும், நின் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' (6.10 : 1.0) என்றும் முடித்தலால் திருவடிகளே உபாயம் என்று அருளி செய்தார்; இதனைப் பிறர்க்கு உபதேசிக்குமிடத்திலும், திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்மினோ (4, 1 :t ) என்றார். மற்றும் ஆறெனக்கு நின்பாதமே (5.7.10), கழல்களவையே (5.8 :11) என்றும், சரனே சரண் நமக்கு” 16. பிரயத்தி : பிர . சிறப்பு: பது - செல்லல், அடைதல், பிரபத்தி - சிறப்பாக அடைதல்; சிறப்பாவது , மனத்தால் அடைதல்; இது சரண் அட்ைதல் எனப் பொருள்படும். 17. 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் (முத. திருவந் 44) என்ற பொய்கையார் பாசுரப்படி அன்பர்கள் எதை இறைவனது திருமேனியாகக் கொள்கின்றனரோ அதனையே இறைவன் தனக்கு வடிவமாகக் கொண்டுள்ள நிலைதான் அர்ச்சை என்பது. .