பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 359 என்று காட்டி, அந்த அவா தத்துவத்திரயங்களையும்" (திரயம்-மூன்று) விளாக்குலை கொள்ளும்படி”* பெருகின் மையையும் என் அவா அறச் சூழ்ந்தாயே (10.10:10) என்று தன்து திருவாயாலே அருளிச் செய்கின்றார். இதனால் சரீர சம்பந்தத்தை அறுத்துத் தேச விசேஷத்திலே கொண்டு போய்த் தன் திருவடிகளில் சேர்ப்பித்துத் தலைக்கட்டினான் என்பதனையும் அருளிச் செய்கின்றார். . . . ஆகவே, இந்த ஐம்பொருள்களும் (அர்த்த பஞ்சகமும்) திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன; இவை அல்லாதவை ஆதுசங்கிக சித்தமாய் வந்தன' என்பதை அறிதல் வேண்டும். யாங்ங்ணம் என்னில் பரம்பொருள் சீமந் நாராயணன் என்றும், அநந்யார்ஹசேஷத்துவமே,' சொரூபம் என்றும், இறைவனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் பிரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், யான் எனது என்ற அகப்பற்று - புறப்பற்றுகளே விரோதி என்றும், அவை நீங்கு தற்கும் கைங்கரிய சித்திக்கும் சர்வ சுலபனான சர்வேசுவரனின் இணையடிகளே உபாயம் என்றும், ஐம்பொறிகளை அடக்கல் முதல் கைங்கரியம் முடிவாக வுள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் விளக்கப் பெற்றன. வேதங்கள் இதிகாச புராணங்கள், மகாத் மாக்கள், முனிவர்கள் இவர்களின் கருத்துகள் இவற்றில் 23. தத்துவத்திரயம் - சித்து, அசித்து, ஈசுவரன் மூன்று தத்துவங்கள் 24. விளாக்குல்ை கொள்ளுதல்-தனக்குள் அடங்கும்படி செய்தல், 25. ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன என்றது இடை யிலே வந்தவை என்றபடி, 26. அநந்யார்ஹசேஷத்துவம் - வேறொருவருக்கும் அல்லாமல் ஈசுவரன் ஒருவனுக்கே அடிமையா யிருத்தல். * .