பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 சடகோபன் செந்தமிழ் அட்ங்கியுள்ளன என்றும் இவையே திருவாய்மொழிக்கே வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரிய வங்கிபுரத்து நம்பியும் அருளிச் செய்வர். கைங்கரியம் : வைணவதத்துவத்தின் நவநீதம் போன்றி. ருப்பது கைங்கரியம்’ ஆகும். வைகுந்தத்தில் பரமபத நாதனுக்குக் கைங்கரியம் புரிவதே வைணவர்கள் விரும்பும் வீடுபேற்றின் பயனாகும். நம்மாழ்வார் விரும்புவதும் இதுவேயாகும். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுஇலா, அடிமை செய்ய வேண்டும் (3.31) என்பது அவர்தம் திருவாய்மொழி. 27. கிங்கரன் - வேலையாள், அடிமை. கிங்கரன் இசய்வது கைங்கரியம்: அதாவது அடிமைத்தன்:ை (Service). }