பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிறப்பும் வளர்ப்பும் சிங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டி நாட்டுக்குரியது. இத்தகைய சிறப்புடன் திகழும் நாட்டில் திக்கெலாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தைச் செழிப்பாக்குவதுதாமிரவருணி என்ற பொருநையாறு. இந்த ஆற்றின் தீரத்திலே திருநகரி எனப்படும் திருக்குருகூர் ஒரு 1. திருக்குருகூர் : பெயர்க் காரணம். ஒரு நாள் நான்முகன் நாராயணனை வணங்குவதற்காக வைகுந்தம் செல்லுகின்றார். நாராயணன் நான் முகனை நோக்கி, 'அன்பனே, உன்னைத் தோற்றுவிப்பதற்கு முன்னரே தண் பொருதை யாற்றின் கரையில் ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதனையே ஆதிக் கோயிலாகக் கொண்டு வழிபடுவாயாக’ என்று கூறுகின்றார். நான்முகன் அத்தலத்தை நோக்கி வருங்கால்தான் பொருநை யாற்றில் மிதந்து வரும் வலம்புரிச் சங்கொன்று 'சங்கணித்துறை'யில் (திருவாய். 10.3 - 11) ஏறி அங்குள்ள ஆதிநாதரை வலம் வருவதைக் காண் கின்றார். இங்ங்ணம் திருமால் உகந்து இடங் கெர்ண்ட இடத்தில் இருக்கும் ஆதிநாதரை வழி பட்டுச் சத்தியலோகம் திரும்புகின்றார்.நான்முகன். திருமாலே குருவாக வந்து உபதேசித்த தலமாத லால் இதற்குக் குருகூர்’ என்ற பெயர் வழங்க லாயிற்று. இத்தலம்தான் பொருநை ஆற்றங் கரையில் உள்ளது. இஃது இப்பொழுது ஆழ்வார் திருநகரி' என்ற பெயரில் வழங்குகின்றது; ஓர் இருப்பூர்தி நிலையம்,