பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 சடகோபன் செந்தமிழ் இந்திரியங்கள், மனம், பிராணன், ஞானம் இவற்றிற்கு வேறுபட்டது. அறிகின்ற தலைவனும், அறிவும், அறியப் பெறும் பொருளும் தானாக இருப்பது. அணுவின் அளவுடைய இந்த ஆன்மா ஆனந்த வடிவத்தைக் கொண்டது; என்றும் நிலைபெற்றிருப்பது. இஃது இதயத்தில் கட்டை விரல் வடிவில் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்பெறும். இது கண் முதலிய இந்திரியங்கட்குத் தோற்றாது. மனத்தாலும் இதனை எண்ணிப் பார்க்க முடியாது. நம்மாழ்வாரும், என் - ஊனில் உயிரில் உர்வினில் கின்ற ஒன்றை உணர்ந்தேனே (8,8:4) என்கின்றார். ‘என் உடலிலும் உயிரிலும், ஞானத்திலும் வியாபித்திருக்கின்ற ஆன்மாவைத் தனக்கு உடலாக உடையவனை' என்பது இதன் பொருளாகும். மேலும் ஆழ்வார் இதனை, - கின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது.இது என்று ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது: உணர்ந்தும், மேலும் காண்பரிது; சென்று சென்று பரம்பரமாய், யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று, தீது என்று அறிவுஅரிதாய், கன்றாய் ஞானம் கடந்ததே (8.8:5) என்ற பாசுரத்தில் விளக்குவதையும் அறியலாம். எம் பெருமான் திருவருளால் நான் அறிந்த ஆன்மப் பொருள் வேறு ஒருவரும் அறியக் கூடியதன்று; அறிந்தாலும் கண் கூடாகக் காணக் கூடியதன்று' என்கின்றார் ஆழ்வார். இதனை மேலும் விளக்குவது இன்றியமையாததா கின்றது. உடல், புலன்கள், மனம், பிராணன்: