பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 சடகோபன் செந்தமிழ் மேல்தான் ஆன்மா கூறப்பெறுகின்றது. சென்று சென்று பரம்பரமாய்' என்ற பகுதியில் இது தெரிவிக்கப் பெறுகின்றது. அதாவது ஒன்றுக்குமேல் ஒன்றாகச் செல்லுகின்ற வரிசையில் மேம்பட்டதென்பதை உணர்த்துகின்றது. அல்லது மற்றோர் உபநிடத வாக்கியப்படி உடலென்ன, புலன்களென்ன? மனம் என்ன, பிராணன் என்ன, புத்தி என்ன இவற்றைக் காட்டிலும் மேம்பட்டிருக்கின்ற நிலைமையைச் சொன்ன தாகவும் கொள்ளலாம். இது போலவே, ஆன்மாவும் பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களின் தன்மைகள் ஒன்றும் இல்லாமல் அவற்றோடு அறத்தேய்ந்து அற்று இருக்கும் என்று விளக்குகின்றார் ஆழ்வார். இது "யாதும் இன்றித் தேய்ந்து அற்று என்ற பாசுரப் பகுதி உணர்த்துகின்றது. இதனை மேலும் தெளிவாக்குகின்றார் ஆழ்வார். உடல், உடலைக் காட்டிலும் புலன்கள், புலன்களைக் காட்டிலும் மனம், மனத்தைக் காட்டிலும் பிராணன் என்று ஒன்றுக்கு மேல் ஒன்று சிறப்புடையதாய் இருத்தல் போன்று, பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களின் தன்மையில் நன்று என்றும் தீது என்றும் அறிய அரிதாய் இருக்கும். எடுத்துக்காட்டு களால் இது மேலும் தெளிவு பெறும். நன்மலரையும் கரியையும் கையில் ஏந்திப் பார்க்கும்போது "மலர் நன்று, கரி நன்றன்று என்று அறிகின்றோம். இக்கருத்து கன்று தீதென்று அறிவரிதாய் என்ற பாசுரப் பகுதியால் தெளிவா கின்றது. உடல் முதலியவை புலன்களின் சேர்க்கையாதலால் இயல்பாகவே வேறுபட்டதாகவுள்ள ஆன்மாவை அறிதல் அரிது; ஞானம் கடந்தது - புலன்களால் ஏற்பட்ட ஞானத் திற்கு எட்டவே எட்டாததாக இருக்கும். இந்த ஆன்மாவைப் பகுதிகளாகப் பிரிக்கவும் முடியாது: அவயவமும் இதற்கு இல்லை. வளர்தல், பகுத்தல், குறைதல், தேய்தல் முதலிய வேறுபாடுகள் இதற்கு இல்லை. இது கத்தியால் சேதித்தல், தீயால் எரித்தல், நீரால்