பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத்திசயம் 365 நனைத்தல், காற்று, வெயில் முதலியவற்றால் உலர்த்தல் போன்ற செய்கைகட்கு இலக்காகாது. இதனை இரணியன் பிரகலாதனைக் கொல்லுவதற்கு மேற்கொண்ட செயல் களும், பல்லவமன்னன் திருநாவுக்கரசரைக் கொல்லுவதற்கு மேற்கொண்ட செயல்களும் பயனற்றுப் போனமையால் தெளியலாம். அறிவு மயமாக இருக்கும் இந்த ஆன்மா அறிவுக்கு இருப்பிடமானது. இந்த அறிவு தர்மபூத ஞானம் என்று வழங்கப் பெறும். இதனால் ஆன்மா தர்மிபூதி ஞானம் என்ற வேறொரு பெயராலும் வழங்கப்பெறும். இந்தச் சீவான்மா தனக்கு எப்பொழுதும், தோன்றிக் கொண்டேயிருக்கும், தன்னைத் தான் என்று அறியும் பொழுது தர்மபூத ஞானம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால், சிவான்மா தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தர்மத ஞானத்தால் மட்டிலுமே அறிய முடியும். தன் சொரூபத்தைத் தர்மபூத ஞானத்தைக் கொண்டும் அறியல்ாம். - ஆன்மா இறைவன் ஏவியபடி நடப்பது. அவனால் தரிக்கப்பெற்று, அவனுக்கு அடிமையாக இருப்பது. நம்மாழ்வார். தமக்கே உரிய தனிமுறையில், 'உறுவ தாவது...திருக்குருகூர் அதனுள் குறிய மாண்உரு ஆகிய நீள் குடக்கூத்தனுக்கு ஆள் செய்வதே (4 10:10) என்று அருளிச் செய்வர். தொலைவில்லி மங்கலத்துத் திருவாய் மொழியை ஒதவல்லார் அடையும் பயனை, செந்தமிழ் பத்தும்வல்லார் அடிமைசெய் வார்திரு மாலுக்கே (6.5:12) . என்று கூறித் தலைக்கட்டுவர். மனம் வாக்குக் காயங்களால் தேவபிரானையே எல்லாவித உறவுகளாலும் கொண்ட 2. சித்துபற்றிய மேலும் விளக்கத்தை இந்த ஆசிரியரின் முத்தில் றி (பாரிநிலையம், 184, பிரகாசம் சான்ல், சென்னை - 600 108) என்ற நூலில் கண்டு தெளியலாம். , “ . . . . . . .