பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 சடகோபன் செந்தமிழ் ஆழ்வார் அருளிய இத்திருப்பதிகம்பற்றிய இத்திருவாய் மொழியை ஒதவல்லவர்கள் பெருமாளும் பிராட்டியுமான சேர்க்கையில் அடிமை செய்யப்பெறுவர் என்று பயன் உரைக்கின்றமையால் கைங்கரியமே ஒருவர் பெறும் பெரும் பேறாகின்றது என்பதை அறியலாம். . அசித்து இஃது அறிவில்லாத பொருள். இஃது அசேதநம் என்றும் வழங்கப்பெறும். இதனால் கிடைக்கக் கூடிய பலனை அநுபவிப்பவன் சேதநனே. அசித்து விகாரத் திற்கு, அஃதாவது ஒரு நிலையினின்றும் பிறிதொரு நிலையை அடைதற்கு இடமானது. இதில் ஞானத்திற்குச் சிறிதும் இடம் இல்லை. இது சுத்த சத்துவம் மிச்ர தத்துவம், சத்துவ சூனியம் என்று மூவகைப்படும். சுத்த சத்துவம் : ஆதல் அழிதல் இல்லாதது. என்றும் நிலை பெற்றி ரு ப் பது. இஃது ஆனந்தத்தையும் ஞானத்தையும் உண்டாக்கக்கடவதாக இருக்கும் இயல்பினை யுடையது. இறைவனின் அநுபவத்தின் பொருட்டே உண்டான இச்சையாலே நித்திய விபூதியில் (பரமபதத்தில்) விமானம் கோபுரம் மண்டபம் உப்பரிக்கை முதலிய வடிவுடன் தோற்றம் கொள்ளும். தீ, கதிரவன் முதலிய ஒளியுள்ள பொருள்களும் மின்மினிக்கு ஒப்பாகும்படி அளவிறந்த ஒளிவடிவினைக் கொண்டது. இது நித்தியர் முத்தர் ஈசுவரன் இவர்களாலும் அளவிடற்கரியது. கண நேரத்திற்குக் கணநேரம் முன்பில்லாத வியப்பினை உண்டாக்க வல்லதாகவும் இருக்கும். நித்தியர், முத்தர், ஈசுவரன் இவர்கள் ஞானத்தால் தன்னை அறிய முடி யாதபடி பேரொளி விட்டுத் திகழும். ஆயினும், சம்சாரிகட்குபத்தர்கட்கு அங்ங்ணம் தோற்றாது. இந்த சுத்தசத்துவம் வைகுந்தத்திலிருந்து மேலே எல்லையின்றி எங்கும் பரவி நிற்கும் தன்மையுடையதாக இருக்கும் -